ரஷ்யாவில் ஏரியில் தவறி விழுந்த இந்திய மருத்துவ மாணவி மரணம்

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் ரஷ்யாவில் உள்ள ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மாணவி

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் முழபிலாங்காடு பகுதியில் குரும்ப பகவதி கோவில் அருகே வசிக்கும் ஷெர்லியின் ஒரே மகள் இ. பிரத்யுஷா (E. Pratyusha).

24 வயதாகும் இவர், ரஷ்யாவில் ஸ்மோலென்ஸ்க் மாநில மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவி ஆவார்.

ஏறியில் தவறி விழுந்த மாணவிகள்பிரத்யுஷா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது தவறுதலாக ஏரியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக, அவருடன் படிக்கும் மலையாளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவத்தின்போது, விபத்தில் சிக்கிய சக மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டதாகவும், ஆனால் பிரத்யுஷாவை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரத்யுஷா ஆகஸ்ட் மாதம் வீடு திரும்பவிருந்த நிலையில், இப்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மும்பை வழியாக உடல் கொண்டு வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Post Comment

You May Have Missed