பிரிட்டீஷ் எழுத்தாளரின் விண்வெளி நாவலுக்கு புக்கர் பரிசு!
லண்டன்: பிரிட்டீஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி(49) எழுதிய ‘ஆர்பிடல்’ என்னும் விண்வெளி தொடர்பான நாவலுக்கு, 2024க்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டது.
லண்டனில் உள்ள ஓல்டு பில்லிங்ஸ்கேட்டில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில், புக்கர் பரிசு வென்ற சமந்தா ஹார்விக்கு ரூ.54 லட்சம் (64,000 அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் புக்கர் பரிசு வென்றவர்களில், மார்கரெட் அட்வுட், சல்மான் ருஷ்டி மற்றும் யான் மார்டெல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பரிசு வழங்கிய நடுவர் எட்மண்ட் டி வால் கூறுகையில்,
சமந்தா ஹார்வி, இந்த நாவலை கோவிட் -19 பாதிப்பால் உலகமே பாதிக்கப்பட்டு லாக்டவுன் ஆன போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் பற்றிய கதையாக எழுதியுள்ளார்.
கடந்த 2020ல் எழுத தொடங்கி, இது அவர் எழுதிய 5வது நாவல். இறுதி போட்டியில் இருந்த 6 பேரில் இவருடைய நாவல் தான் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் புக்கர் பரிசு வென்றவர்களை காட்டிலும், இவருடைய நாவல் அதிக பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. பூமியின் அழகை விண்வெளியில் இருந்து பார்க்கும்போது என்ற அவரது சித்தரிப்பைப் வாசகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
அவருடைய வரிகள், உலகத்தை விசித்திரமாகவும் புதியதாகவும் நமக்கு காட்டுகின்றன என நடுவர் எட்மண்ட் டி வால் கூறினார். சமந்தா ஹார்வி கூறுகையில், நான் இந்த நாவலை, கோவிட்-19 முழு அடைப்பால் வீட்டில் இருந்த போது எழுதினேன். ஆறு கதாபாத்திரங்களின் அனுபவத்தை, அடைபட்ட ஒரு டின் கேனில் சிக்கிய அனுபவத்துடன் ஒப்பிட்டுள்ளேன். விண்வெளி வீரர்கள் பதினாறு சூரிய உதயங்களையும் பதினாறு சூரிய அஸ்தமனங்களையும் கண்டபடி உலகத்தை சுற்றி வருவதைக் விளக்கி கூறியிருந்தேன். தற்போது இந்த நாவலுக்கு புக்கர் பரிசு பெற்றது மிக்க மகிழ்ச்சியான தருணம் என்றார்.