பிரிட்டானியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு காலில் ஏற்பட்ட வீக்கம்;மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி செய்தி..!

பிரித்தானியர் ஒருவர் தனது 35ஆவது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக பிரான்சுக்கு சென்றபோது, அவரது கால் விரல் ஒன்றில் திடீரென வீக்கம் கண்டுள்ளது.

மருத்துவர்கள் கூறிய விடயத்தால் அதிர்ச்சி

Cramlington என்னுமிடத்தைச் சேர்ந்த Colin Blake, மருத்துவர் ஒருவரைக் காணச் சென்றுள்ளார். அவரது விரலை ஆராய்ந்த மருத்துவர், அவரை Peruvian wolf spider என்னும் சிலந்தி கடித்துள்ளது என்றும், அது அவரது விரலுக்குள் முட்டையிட்டுள்ளது என்றும் கூற, அதிர்ச்சியடைந்துள்ளார் அவர். அந்த மருத்துவர், அந்த காயத்தை வெட்டித் திறந்து, அதற்குள்ளிருந்த சிலந்தி முட்டைகளை அகற்றியுள்ளார்.

அடுத்த அதிர்ச்சிநான்கு வாரங்களுக்குப் பின், தனது விரலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்த Colin, மீண்டும் மருத்துவரைக் காணச் சென்றுள்ளார்.Colinஐ பரிசோதித்த மருத்துவர்கள், அவரது விரலுக்குள் இருந்த சிலந்தி முட்டை ஒன்று குஞ்சு பொறித்துள்ளதாகவும், ஆனால், முன்பு அவர் பார்த்த மருத்துவர்கள் கொடுத்த ஆன்டிபயாட்டிக் அந்த சிலந்தியைக் கொன்றுவிட்டது என்றும் கூறியிருக்கிறார்கள்.

Colinஉடைய காலுக்குள் இருந்த முட்டையிலிருந்து வெளியேறிய அந்த சிலந்தி, அவரது காலிலுள்ள சதையைத் தின்றபடி கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற முயன்றுள்ளது என்றும் மருத்துவர்கள் கூற, Colin அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

உலகின் விலை உயர்ந்த மற்றும் மலிவான நகரங்கள்.. லிஸ்டில் 2 இந்திய சிட்டிக்கள்.. சென்னைக்கு எந்த இடம் பாருங்க

Next post

8 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: ரஷ்ய பெண்களுக்கு அதிபர் புதின் வலியுறுத்தல்…!

Post Comment

You May Have Missed