தனிநபர் தகவல்களை பரிமாறுவது கிரிமினல் குற்றம்!
சவுதி அமைச்சரவையில் 2021-இல் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் தகவல்கள் பாதுகாப்புச் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி, பொது இடங்கள், விருந்து நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ஆகிய இடங்களில் எடுக்கப்படும் தனிநபர்களின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ வெளியிடுவது குற்றமாகும்.
மேலும், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் சேகரிக்கப்படும் தனிநபர் விபரங்களை பிறருக்கு விற்பதோ, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உள்ளிட்டவை கடுமையான அபராதத்திற்குரிய குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 comments