சிங்கப்பூரில் மொத்த வேலைவாய்ப்பு விகிதம் விரிவடைகிறது; வேலையின்மை விகிதம் குறைகிறது
சிங்கப்பூரில் தொடர்ந்து 7ஆவது காலாண்டாக மொத்த வேலை வாய்ப்புகளின் விகிதம் உயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சு வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஊழியர் பற்றாக்குறை தணியும் அறிகுறிகள் தெரிகின்றன.
வேலையின்மை விகிதம் குறைவாக அதாவது 1.9 விழுக்காட்டில் இருக்கிறது.குடியிருப்பாளர்களிடையே வேலை விகிதம் கோவிட் நிலவரத்துக்கு முன்பிருந்த நிலையில் உள்ளது.
முன்னோக்கிப் பார்க்கையில்,நிறுவனங்கள் கவனமான போக்கைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.வேலைக்கு ஆள் எடுப்பதற்கு அல்லது சம்பளத்தை உயர்த்துவதற்குக் குறைவான நிறுவனங்களே முன்வருகின்றன.
இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது.அதற்கு முன்னர் 3 காலாண்டுகளுக்கு ஆட்குறைப்பு அதிகமாக இடம்பெற்றது.
5 comments