சவுதி உணவகங்களில் வேலை பார்க்கும் உழியர்களுக்கு புதிய விதிமுறை:மீறினால் அபராதம்!
உணவகங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் தனிப்பட்ட சுகாதாரம் தொடர்பான மீறல்கள் மற்றும் அபராதங்களை நகர்ப்புற வீட்டுவசதி அமைச்சகம் புதுப்பித்துள்ளது.
திருத்தப்பட்ட விதிகளின்படி, தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிக்காத தொழிலாளர்களுக்கு 200 ரியால் முதல் 1000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும்.
நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளை ஐந்து வகைகளாகப் பிரித்து அபராதங்களும் வேறுபடுத்தப்பட்டுள்ளன. வகை 1 முதல் 5 வரையிலான நிறுவனங்களுக்கு தனிப்பட்ட சுகாதாரம் இல்லாததால் 200, 400, 600, 300 மற்றும் 1000 – ரியால்கள் அபராதம் விதிக்கப்படும்.
பணியின் போது மூக்கு, வாயைத் தொடுதல் மற்றும் எச்சில் துப்புதல் போன்ற செயல்களைச் செய்யும் ஒரு தொழிலாளிக்கு நிறுவனத்தின் வகையைப் பொறுத்து 400 ரியால்கள் முதல் 2000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
நோய் அறிகுறிகள், தோல் நோய்கள் அல்லது காயங்கள், கொப்பளங்கள் உள்ள தொழிலாளர்கள் வேலை செய்தாலும் மேலே குறிப்பிட்டபடி அபராதம் விதிக்கப்படும்.
கையுறைகள், முககவசம், தலைக்கவசங்கள், சீருடைகள் அல்லது கடிகாரங்கள், நகைகள் போன்றவற்றை அணியக் கூடாத இடங்களில் அணியத் தவறினால் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
நிறுவனத்திற்குள் தூங்குவது, நியமிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே சாப்பிடுவது, தடைசெய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்தல் மற்றும் பணியாளரின் தனிப்பட்ட பொருட்களை நியமிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே வைத்தல் போன்ற விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
129 comments