சர்வதேச யோகா தினம்.. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் பங்கேற்பு..

மைசூர்: யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் 15 ஆயிரம் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தலைவர்கள் பங்கேற்பு

யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் யோகா செய்தனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அமைச்சர்கள் பலர் நேரடியாக மக்களோடு மக்களாக அமர்ந்து யோகா செய்தனர். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் யோகா செய்தார். அதேபோல் அமைச்சர் மனிஷ் சிசோடியா அங்கு யோகா செய்தார். உத்தர பிரதேசத்தில் அமைச்சர்கள் யோகா தினத்தை அனுசரித்தனர்.

அலங்காரம்

2022 சர்வதேச யோகா தினத்தன்று ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணலால் சிலையை செதுக்கியுள்ளார். இவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை இதில் வரைந்துள்ளார். அங்கு இன்று காலையில் இருந்து பலர் யோகாசனம் செய்து வருகின்றனர். அதேபோல் பாஜக ஆளாத மற்ற மாநிலங்களிலும் யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

மோடியின் தீவிர ரசிகன் நான்’ – அமெரிக்காவில் இந்தியப் பிரதமரை சந்தித்த எலான் மஸ்க் புகழாரம்

Next post

அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கிக் கப்பலில் குறையும் ஆக்சிஜன்!- தொடரும் தேடுதல் பணி

Post Comment

You May Have Missed