சரக்கு கப்பலின் அடியில் அமர்ந்து பயணித்த 4 பேர்.. அதுவும் 14 நாட்கள்.. பின்னணியில் பெரும் சோகம்

சரக்கு கப்பலின் அடிப்பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொண்ட நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேர் பிரேசிலில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் 14 நாட்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்களாம்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. வறுமை தாண்டவம் ஆடும் இந்த நாட்டில் வன்முறைகள்,குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அடைக்கலம் கோரும் நிலை உள்ளது. அந்த வகையில், சரக்கு கப்பல் ஒன்றின் அடிப்பகுதி ஒன்றில் இருந்தபடி 4 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள்.

அட்லாண்டிக் கடலில் பயணித்த அந்த கப்பலின் அடிப்பகுதியில் இருந்த படி 10 நாட்களை கடத்தி விட்டனர். ஆனால், அடுத்துவரும் நாட்களுக்கு அவர்களுக்கு உணவு பொருட்களும் இல்லை. எனினும், கடல் நீரை குடித்து உயிரை கையில் பிடித்தபிடி பயணித்துள்ளனர். கப்பல் பிரேசிலில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் வந்த போது கப்பலின் சுக்கானில் அமர்ந்தபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டவர்களை பார்த்த பிரேசில் மத்திய படை போலீசார் 4 பேரையும் மீட்டது.

ஐரோப்பா செல்வதற்கு திட்டமிட்டு கப்பலில் ஏறியவர்கள் அதற்கு நேர் எதிர்திசையில் வந்து சேர்ந்து இருப்பதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து விட்டாரக்ளாம். இதில் இருவர், நாங்கள் மீண்டும் நைஜீரியாவுக்கே திரும்பி போய்விடுகிறோம் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏனைய இருவரும் தங்களுக்கு பிரேசிலில் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தற்போது சா பாலோ சர்ச் பகுதியில் முகாமில் தங்கியிருக்கும் அவர்கள், நாட்டை விட்டு வெளியேறியது ஏன் என்று கேட்ட போது, நைஜீரியாவில் பொருளாதார சூழல் மிக மோசமாக உள்ளது. அரசியல் நிலைத்தன்மை இல்லை. குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாகவே எங்கள் தாய்மண்ணை விட்டு வெளியேற முடிவு செய்தோம்” என்ற்னர். ஆப்பிரிக்க நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் நைஜீரியாவில் நீண்ட காலமாகாவே வன்முறை, வறுமை, கடத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன.

1 thought on “சரக்கு கப்பலின் அடியில் அமர்ந்து பயணித்த 4 பேர்.. அதுவும் 14 நாட்கள்.. பின்னணியில் பெரும் சோகம்”

Leave a Comment