ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது: மைக் டைசன்!

வாஷிங்டன்:

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ஜேக் பால் உடன் போட்டியிடுவதற்கு முன், தான் கடுமையான உடல் நிலை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தேன். நான் இறந்து விட்டதாகவே கருதினேன் என மைக் டைசன் கூறினார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், நேற்று நடைபெற்ற போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனை,58, ஜேக் பால்,27, வீழ்த்தினார்.

இது குறித்து மைக் டைசன் கூறியதாவது:

ஜூன் மாதத்தில் தான் கிட்டத்தட்ட இறந்துவிட்டதாகவும், நவம்பர் 15 அன்று போட்டிக்க தயாராவதற்கு புதிதாக தனது பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்று டாக்டரிடம் கேட்டேன்.

ஆரோக்கியமாக இருக்க போராட வேண்டியிருந்தது, 8 முறை ரத்தம் ஏற்றப்பட்டது. இருந்தாலும் என் வயதில் பாதி குறைந்தவரின் திறமையால் எனது போராட்டம் குறைந்துவிட்டது. நேற்று இரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடைசியாக ஒரு முறை போட்டிக்கு வந்ததற்கு வருத்தமில்லை. இவ்வாறு மைக் டைசன் கூறினார்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

You May Have Missed