உலகம் முழுவதும் மிகவும் முக்கியமான சுகாதார பிரச்சினையாக இருப்பது உடல் பருமன். போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் பலரது எடை கிடுகிடுவென உயர்ந்து விடுகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுவதால் பல்வேறு விதமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.
உடல் பருமன் பிரச்சினை
இந்நிலையில் வளைகுடா நாடுகளை உடல் பருமன் விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக குவைத் நாட்டின் மக்கள்தொகை 77 சதவீதம் பேருக்கு உடல் பருமன் இருக்கிறதாம். இந்நாட்டின் மக்கள்தொகை என்று பார்த்தால் சுமார் 43 லட்சம் என்று கூறுகின்றனர். அப்படியெனில் 33 லட்சம் பேருக்கு உடல் பருமன் இருப்பதாக தெரிகிறது.
திடீர் உயிரிழப்புகளால் அச்சம்இந்த தகவல் தனியார் அமைப்பு ஒன்று எடுத்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மிகவும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உடல் பருமனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. திடீர் உயிரிழப்புகளுக்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
எந்தெந்த வயதினருக்கு சிக்கல்சர்வதேச அளவில் மரணத்திற்கு வழிவகுக்கும் காரணிகளில் 5வது இடத்தில் உடல் பருமன் இருக்கிறது. குவைத் நாட்டை பொறுத்தவரை 18 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களுக்கு அதிக அளவில் உடல் பருமன் பாதிப்பு உள்ளது. மேலும் உடல் பருமன் காரணமாக சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், தூக்கமின்மை, குறட்டை, மூட்டு வலி, தண்டவடப் பிரச்சினைகள் உள்ளிட்டவை வர வாய்ப்புகள் இருக்கின்றன.
பெண்களுக்கு பாதிப்புஇதுதவிர ஹார்மோன் செயல்பாடுகளை பாதிக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சுரப்பு பாதிப்பால் விரைவாக பூப்படைந்து விடுகின்றனர். மேலும் வழக்கத்திற்கு மாறான மாதவிடாய் சுழற்சி வருகிறது. ஆண்களையும் சும்மா விடுவதில்லை. பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தி விடுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குவைத் அரசு நடவடிக்கைஎனவே உடல் பருமனை குறைக்கும் வகையில் குவைத் அரசு தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக உடல் உழைப்பை கட்டாயப்படுத்தினாலே எல்லாம் சரியாக நடந்துவிடும். உதாரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு அலுவலகங்களிலும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க, பள்ளிகளில் விளையாட்டுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.