Last Updated on: 4th September 2023, 01:36 pm
வளைகுடா நாடுகளில் உள்ள பணக்கார நாடு குவைத். சர்வதேச அளவில் அதிகப்படியான பண மதிப்பை கொண்டிருப்பதால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், இங்கு வந்து வேலை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் இந்தியர்களும் அதிகப்படியானோர் அடங்குவர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த மக்கள்.
குவைத் அரசு அறிவிப்புலட்சக்கணக்கான கேரளா மக்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். குவைத் நாட்டின் மக்கள்தொகையை எடுத்து கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கியிருப்போர். அந்த அளவிற்கு அந்நாட்டு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குவைத் நாட்டிற்கு செல்ல வேலைவாய்ப்பு விசா, வர்த்தக பயண விசா ஆகியவை தற்போது பயன்பாட்டில் உள்ளது.
குடும்ப விசாவிற்கு மீண்டும் அனுமதிமேலும் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்து தங்க வைத்து கொள்ளும் வகையில் விசா வசதிகளை செய்து தந்துள்ளது. இதன்மூலம் பலரும் பயன்பெற்று வந்தனர். இதற்கிடையில் கொரோனா காலக்கட்டத்தில் குடும்ப விசாவிற்கு தடை விதிக்கப்பட்டது. ஓராண்டிற்கு பின்னர் மீண்டும் இயல்பு திரும்பியது.
உள்துறை அமைச்சகம் அதிரடிஅதன்பிறகு திடீரென தடை திரும்பியது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் குடும்ப விசா வழங்கும் ஏற்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. ஓராண்டை கடந்த நிலையில் மேற்குறிப்பிட்ட தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை ஊழியர்கள் ரெடிகுடும்ப விசா மூலம் குவைத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களின் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வந்து உடன் தங்க வைத்து கொள்ளலாம். முதல்கட்டமாக சுகாதாரத் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடும்ப விசா மூலம் ஆண்கள் 15 ஆண்டுகளும், பெண்கள் 18 ஆண்டுகளும் குவைத் நாட்டில் தங்கலாம்.
எப்படி விண்ணப்பம் செய்வது?இதற்காக அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பான சாஹெலில் (Sahel App) ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த ஏற்பாடு ஓராண்டாக தங்கள் குடும்பத்தை பார்க்காமல், குவைத் நாட்டிற்கு வரவழைத்து கொள்ள முடியாமல் தவித்தவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் காணப்படுகிறது. குறிப்பாக பெரிதும் ஆர்வத்துடன் காத்திருந்த இந்தியர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.