குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் காலமானார்- உலக நாடுகள் இரங்கல்!

குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் காலமானார்- உலக நாடுகள் இரங்கல்!

Last Updated on: 16th December 2023, 07:18 pm

குவைத்தின் மன்னர் அமீர் ஷேக் நவாப் அல் அகமது அல் ஜாபஹ் காலமானார். அவருக்கு வயது 86.இதுதொடர்பாக குவைத் நீதிமன்றத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அத்தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம், ஷேக் நவாஃப், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன உடல்நலப் பிரச்னை என தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் தற்போது அவர் காலமானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.குவைத் மன்னராக இருந்த அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக 2020ஆம் ஆண்டு காலமானார். அதனையடுத்து பட்டத்து இளவரசராக இருந்து வந்த ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா மன்னராக பொறுப்பேற்றார்.

1991ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் குவைத் மீது படையெடுத்த காலகட்டத்தில் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். அதன் பின்னர் அவர் சமூக நலத் துறை உள்ளிட்டவற்றுக்கு அமைச்சராக இருந்தார். பின்னர் குவைத் தேசிய ராணுவத்தின் துணை தலைவராக பொறுப்பேற்ற அவர், அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு குவைத்தின் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.

Leave a Comment