8ஆம் வகுப்பு பாஸ் போதும்… ஒன் ஸ்டாப் சென்டரில் ரூ.18,000 சம்பளத்தில் வேலை…
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த சேவை மையங்களை (one stop centre) நிறுவி இயக்கி வருகிறது. இதில் கோயம்புத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள வழக்குப் பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் என்ற பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Master of social work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology படித்திருக்க வேண்டும். 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாவலர் பணிக்கு, கல்வித்தகுதி 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். 24 மணிநேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 தலைமுறைகளைக் கண்ட பாட்டி… சொந்த பந்தங்கள் கூடி நடனமாடி செஞ்சுரி செலிபிரேஷன்…
எட்டாம் வகுப்பு முடித்து, பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தாலும், நமது கோவை மாவட்டத்தில் பாதுகாவலர் பணி கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த சேவை -1 இல் பணிபுரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கான தகுதி நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் பணியில் கோவை, பொள்ளாச்சியில் காலியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 மணிநேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.10,000 சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
Post Comment