ஸ்டீல் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கறதால இத்தனை நல்ல விஷயம் இருக்காம்… இன்னைக்கே மாத்துங்க…

ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை ஸ்டைலாக மாற்றிக் கொண்டோம். ஆனால் அதில் தண்ணீர் குடிப்பதில் உள்ள நல்ல விஷயங்கள் என்னவென்றே தெரியாமல் தான் அதை பயன்படுத்துகிறோம். அதை தெரிந்து கொண்டு குடிப்பதன் மூலம் அவற்றின் பயன்களை முழுமையகப் பெற முடியும்.

​நச்சுக்கள் குறைவு

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைத்துக் குடிப்பதைத் தவிர்க்கவும் ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதையுமே சமீப காலங்களில் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதிகமாகப் பரிந்துரை செய்கிறார்கள்.இதற்கு மிக முக்கியக் காரணமே பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ளது போன்று நச்சுக்கழிவுகள், ரசாயனக் கழிவுகள் ஸ்டீல் பாட்டில்ககளில் கிடையாது.

​BPA இல்லாதது

பிசுபீனால் (bisphenal) என்னும் வேதிப்பொருள் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும். இந்த வேதிப்பொருள் உடலுக்கு மிகவும் ஆபத்தானது.

இந்த மோசமான விளைவுகள் கொண்ட வேதிப்பொருள்கள் ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளில் தடையே செய்யப்பட்டு இருக்கின்றன. அதனால் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக ஸ்டீல் பாட்டிலில் தண்ணீர் குடியுங்கள்.

​ஆபத்தான வேதிப்பொருள் இல்லாதது

பிளாஸ்டிக் என்பதே மிக மோசமான ஒரு வேதிப்பொருள் தான். பாட்டில்கள் போன்ற பாத்திரங்களாகச் செய்யும் போது ஏராளமான உடலுக்கு தீங்கு தரும் கெமிக்கல்கள் அதில் சேர்க்கப்படும்.

அந்த பாட்டில்களில் தண்ணீர் குடிக்கும் போது உடலில் நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக ஈஸ்ட்ரஜென் உள்ளிட்ட ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடும். இந்த ஆபத்தைத் தவிர்க்க ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது நல்லது.

​இரண்டு வகை நீரும்…

பிளாஸ்டிக் பாட்டில்களில் சுடுதண்ணீர் வைத்துக் குடிக்கக் கூடாது. குடிக்கவும் முடியாது. அது வெப்பதில் உருகி தண்ணீரில் பிளாஸ்டிக்கின் நறுமணம் வீசும்.

ஆனால் ஸ்டீல் பாட்டில்களில் குளிர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ள முடியும். சுடுதண்ணீரும் வைத்துக் கொள்ளலாம்.

​பாக்டீரியா தொற்று ஏற்படுவதில்லை

ஸ்டீல் பாட்டில்களில் துரு பிடிப்பது, பூஞ்சைத் தொற்று ஏற்படுவது போன்றவை இருக்காது. ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களில் பூஞ்சைத் தொற்று பிரச்சினைகள் உண்டு.

ஸ்டீல் பாட்டில்களில் இந்த பூஞ்சைத் தொற்று ஆகியறை தவிர்க்கப்படுவதால் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

​சுற்றுச்சூழல் பாதிப்பு

பிளாஸ்டிக் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வந்தாலும் மண்ணில் மட்கவே மட்காது. எரித்தாலும் அதன் புகை காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும்.ஆனால் ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கும்போது இந்த சுற்றுச்சூழல் மாசுபாடுகள் ஏற்படுவதில்லை.​

சுவையை கூட்டும்

பிளாஸ்டிக் பாட்டில்களில் வைத்து குடிக்கும் தண்ணீரைக் காட்டிலும் ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் வைத்துக் குடிப்பது நல்லது.

ஸ்டீல் பாட்டில்களில் குடிக்கும் தண்ணீர் கடைகளில் வாங்கும் பாட்டில் தண்ணீரை விட சுவை மிகுந்ததாக இருக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

2 comments

  • comments user
    create binance account

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

    comments user
    binance referral

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

    Post Comment

    You May Have Missed