மழைக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமலை தடுக்கும் ஆயுர்வேத மூலிகைகள்.. குழந்தைகளும் எடுக்கலாம்!

கோடை வெப்பம் முடிந்து இலேசான காற்று மற்றும் குளிர்ந்த வெப்பநிலையை கொண்டிருக்கிறோம். இந்த பருவகால மாற்றத்தை உடல் ஏற்க சில காலம் எடுக்கும். பருவகால மாற்றத்தின் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பை விட குறையும் நிலையில் வைரஸ் தொற்று அபாயமும் அதிகரிக்கிறது. இந்நிலையில் ஆரோக்கியத்தை அதிகரிக்க மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இந்த மூலிகைகள் உங்களுக்கு உதவும்.

​அஸ்வகந்தா மழைகாலங்களில் அவசியம் ஏன் தெரியுமா?​

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்துகளில் அஸ்வகந்தாவும் முக்கியமான ஒன்று. இது வலிமையை அதிகரிக்க செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இது கொலஸ்ட்ரால், மன அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும். மேலும் நினைவாற்றல், டெஸ்டோஸ்ட்ரான் அளவுகள் வலிமையை மேம்படுத்துகிறது.​அஸ்வகந்தாவை பாலில் கலந்து குடிக்கலாம். உணவில் சேர்க்கும் முறை அஸ்வகந்தா காப்ஸ்யூல் வடிவில் எடுக்க நினைத்தால் மருத்துவரை அணுகி ஆலோசித்து எடுத்துகொள்ளலாம். இதை துணை பொருளாக எடுப்பது மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.

​மழைக்காலத்தில் கண்டிப்பாக இஞ்சி எடுக்க வேண்டும் ஏன் தெரியுமா?

இஞ்சி பயோஆக்டிவ் உட்பொருளான இஞ்சிரால் கொண்டது. அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, ஆன் டி டூமர் ஆன் டி ஆக்ஸிடண்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடுகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கொண்டுள்ள இது செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது எடை இழப்பு, கொழுப்பின் அளவு குறைத்தல் போன்று அஜீரணத்தை போக்கவும் தொற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. இஞ்சி டீ குடிப்பது சூப்களில் சேர்ப்பது, உணவில் சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும். சுவாச நோய்களில் நேர்மறையான விளைவுகளுக்கு இஞ்சி சிரப் முக்கியமானது.

மழைக்காலத்தில் மஞ்சள் ஏன் அவசியம் தெரியுமா?

மஞ்சள் சமையலறையில் இருக்கும் முக்கிய பொருள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இதை உணவில் சேர்ப்பது போன்று பாலிலும் கலந்து எடுக்கலாம். காயங்களை விரைவில் குணப்படுத்த செய்யும். எலும்பு ஆரோக்கியத்துக்கு நன்மை செய்கிறது. இது குர்குமின் கொண்டது இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. ஆன் டி ஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டுள்ளதால் உடலை எப்போதும் வலிமையாக வைத்திருக்க உதவுகிறது.

​மழைக்காலத்தில் மிளகு ஏன் அவசியம்?​

மிளகு ஆன்டி – பாக்டீரியல் பண்புகளை கொண்டது. இதன் பண்புகள் செரிமானத்தை தூண்டுவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் மிளகு சளி மற்றும் சுவாசப்பாதை அடைப்பை நீக்கும் தன்மை கொண்டவை. தினசரி உணவில் மிளகு சேர்த்து வருவது உடலில் சளி தொற்றை வராமல் தடுக்க செய்யும். மழைக்காலங்களில் மிளகாய்க்கு மாற்றாக மிளகு சேர்க்கலாம். சூப் வகைகளில் மிளகு சேர்த்து கொடுக்கலாம்.

3 thoughts on “மழைக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமலை தடுக்கும் ஆயுர்வேத மூலிகைகள்.. குழந்தைகளும் எடுக்கலாம்!”

  1. Hi,

    We reviewed your website tamilglobe.com and noticed accessibility gaps that need attention.

    Inaccessible sites don’t just lose clients — they also face growing legal risks.

    That’s why we’re offering you a free scan, a detailed report, and your first fix at no cost.

    Start your free scan today: http://scan4.free

    Best,
    The PLURO Team

    When you wish to stop getting additional communications from this campaign, please fill the form at bit. ly/fillunsubform with your domain address (URL).
    39 Rue Du Palais, East Rochester, CA, USA, 94713

    Reply

Leave a Comment