சொறி, சிரங்கு தோல் நோய் என எல்லா சரும நோய்க்கும் இந்த வீட்டு வைத்தியம் போதுமாம்…

சொறி, சிரங்கு (scabies) என்பவை ஒருவகையான சரும நோயாகும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களால் ஏற்படும் சரும பாதிப்பாகும். இது சருமத்தில் தோலுரிதல், சிவந்து போதல், கடுமையான அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். சருமத்தில் அதிகமாக தடிப்புகள் உண்டாகும். இந்த சிரங்கு பிரச்சினையை வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்து ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும். அந்த வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

தோலில் சிரங்கு பிரச்சினை இருந்தால் மிகக் கடுமையான அளவில் அரிப்பு உண்டாகும். சொரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். அதனால் லேசாக சொரிந்தாலும் சருமம் சிவந்து போய் புண்ணாகிவிடும். ரத்தம் வரும். இந்த கடுமையான சருமப் பிரச்சினையைச் சரிசெய்ய கீழ்வரும் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.

கற்றாழை ஜெல்

சொறி, சிரங்கு ஆகியவற்றுக்கு கற்றாழை ஜெல் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் இதற்கு கடைகளில் விற்கும் கற்றழை ஜெல்லை வாங்கிப் பயன்படுத்தாமல் ஃபிரஷ்ஷாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது.

கற்றாழையில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அதிகம். அதனால் இதை அப்ளை செய்யும்போது சருமத்திலுள்ள கிருமிகள் மற்றும் தொற்றுக்கள் அழிந்து போகும். அதோடு இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைக் கட்டுப்படுத்தும்.

​சுகாதாரமாக இருக்க வேண்டும்

நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள இடம் மற்றும் பொருள் சுகாதாரமாக இருந்தலே நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அதில் சருமப் பிரச்சினைகள் முக்கியமானது.

பயன்படுத்தும் டவல், ஆடைகள், பெடஷீட், தலையணை உறை, சோபா கவர் ஆகியவை சுத்தமாக இருக்க வேண்டும். அவற்றை துவைக்கும் போது கொஞ்சம் கிருமி நாசினிகள் சேர்த்து துவைத்து நன்கு வெளியில் காய வைப்பது நல்லது.

ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கிருமி நாசினிகள் சேர்த்த சோப்பை போட்டு குளிப்பது நல்லது.

நீங்கள் பயன்படுத்தும் பொருள்களை வேறு யாரும் பயன்படுத்த அனுதிக்காதீர்கள். ஏனெனில் சொறி, சிரங்கு ஆகியவை அதிலிருந்து வெளியேறும் திரவங்களின் வழியாக பரவும். அதனால் உங்களுடைய பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

​வேப்ப எண்ணெய்

வேம்பு நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. அதில் குறிப்பாக ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் அதிகம்.


கிருமிகளைக் கொல்லும் தன்மை அதிகம். அதனால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இந்த வேப்ப எண்ணெய் தீர்வாக அமையும்.

சொறி, சிரங்கு பிரச்சினை உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்துவிட்டு பிறகு அது லேசாக உலர்ந்ததும் வேப்ப எண்ணையை அப்ளை செய்யுங்கள். மிக வேகமாக சொறி மற்றும் சிரங்கு சரியாவதோடு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலையும் குறைக்கும்.

​மஞ்சள்

சிரங்குக்கு மிகச்சிறந்த மருந்து என்றால் அது மஞ்சளை சொல்லலாம். மஞ்சளில் நிறைய ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகளும் இருக்கின்றன.

இவை சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்ய மிக உதவியாக இருக்கும். அதனால் மஞ்சளை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெயில் குழைந்து சொறி மற்றும் சிரங்கு உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் தேங்காய் எண்ணெய்க்கும் ஹீலிங் பண்புகள் இருப்பதால் மிக வேகமாக சரிசெய்யும்.

​கிராம்பு எண்ணெய்

கிராம்பில் ஆன்டி ஆக்சிடண்ட் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களைச் சரிசெய்வதோடு சருமத்தை ரிப்பேர் செய்து புதிய செல்களைத் தோற்றுவிக்கவும் இறந்த செல்களை நீக்கவும் உதவி செய்கிறது.

கிராம்பு எண்ணெய் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை மட்டுமல்ல, சருமத்திலுள்ள கிருமிகளையும் அழித்து, சொறி, சிரங்கை விரட்ட உதவி செய்கிறது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

சரக்கு கப்பலின் அடியில் அமர்ந்து பயணித்த 4 பேர்.. அதுவும் 14 நாட்கள்.. பின்னணியில் பெரும் சோகம்

Next post

வீகன் டயட்டில் இருந்த பிரபலத்துக்கு நேர்ந்த பரிதாபம்.. காய்கறிகள், பழங்கள் மட்டுமே உண்டதால் வந்த வினை..

3 comments

  • comments user
    Binance – rejestracja

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

    comments user
    binance

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

    comments user
    Index Home

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/ur/register-person?ref=OMM3XK51

    Post Comment

    You May Have Missed