கிடைச்ச வெற்றிய ஊருக்கு சொல்ல பிடிச்ச ஓட்டம்: மாரத்தான் பிறந்தது!

இதே நாள், வருடம் கி.மு 490 கிரீஸ் நாட்டில் பாரசீகர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையே போர் நடந்து முடிந்தது. வென்றது கிரேக்கப் படை. சந்தோஷ பெரு வெள்ளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போர் வீரர்கள், இந்த செய்தியை ஊர் மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். கிரேக்கப் படையின் வீரன் பெய்டிபைட்ஸ் என்பவம், ஆர்வத்துட போர் நடந்த இடத்திலிருந்து ஸ்பாட்டா என்ற நகரத்துக்கு ஓடினான்.

காடு, மலைகள் என எங்கும் நிற்கவில்லை. இடைவிடாத 42.5 கிமீ ஓடிய அவன், செய்தியை ஊர் மக்களிடம் கூறுகிறான். மக்களிடம் செய்தியைச் சேர்த்தவுடன் மயங்கி விழுகிறான். உயிரிழக்கிறான். இந்த செய்தியைச் சொல்ல பெய்டிபைட்ஸ் ஓடத் தொடங்கிய இடம், அதாவது போர் நடந்த இடம் மாரத்தான். பின் நாளில் இதை அடையாளமாகக் கொண்டு பெய்டிபைட்ஸ் வீரனின் நினைவாகத் தொடங்கப்பட்டதே மாராத்தான் எனப் படுகிறது. மாரத்தான் குறித்து பரவலாகக் கூறப்படும் கதை இதுதான்.

அதே சமயம் இது வரலாறு சொல்லும் தகவல் அல்ல. புராணங்கள் மட்டுமே இதைப் பற்றிப் பேசுகிறது. இவை அனைத்தும் கற்பனையாகக்கூட இருக்கலாம் என ஆய்வாளர்கள் சிலர் கூறுகிறார்கள். எனினும், மாரத்தான் நகரிலிருந்து ஸ்பாட்டா நகரம் தோராயமாக 43 கிமீ தூரத்தில்தான் அமைந்துள்ளது. இந்த கணக்கை வைத்தே மாரத்தான் போட்டிகளின் தூரம் 26.2 மயில்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இந்த போட்டிகள் 1986 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டுத் தொடர்ந்து நடந்து வருகிறது. 1986 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட போதும், முறையாக இந்த போட்டிகளுக்கான விதிமுறைகள் 1921ஆம் ஆண்டுதான் தொடுக்கப்பட்டது. இந்த போட்டியில் வீரர்கள் உடல்நலம் பேணுபவர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வரும்போதும், மாரத்தான் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தூரத்தைக் கடந்தவர்கள் மிகச் சிலரே. போட்டியில் பங்கேற்று ஓடிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தவர்கள் பலர். மாரத்தான் மீது ஆர்வம் கொண்டு, போட்டியின் தூரத்தைக் கடக்க முடியாது என நினைப்பவர்களுக்காகவே மினி மாரத்தான் உருவாக்கப்பட்டது.

பெரும்பாலும் சர்வதேச போட்டிகளில் மினி மாரத்தான் போட்டிகளுக்கான தூரம் 10 கிமி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமயங்களில் நாடுதோறும், ஏன் நகரம்தோறும் அவ்வபோது மினி மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகளுக்கான தூரம், போட்டியை நடத்துபவர்கள் நிர்ணயம் செய்து கொள்வார்கள்.

பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் மினி மாரத்தான் போட்டியே குறைந்தபட்ச தூரத்தைக் கொண்டது. அதாவது 2 கிமீ தூரத்தை இது கொண்டிருக்கும்.

மாரத்தான் உருவான கதை குறித்து உலகில் பெருவாரியானவர்கள் நம்பும் கதை இதுவே. அதே சமயத்தில் பெய்டிபைட்ஸ் ஒரு தூதுவன் கிரேக்கர்களின் வெற்றி செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுக்காக அவனைக் கிரேக்க வீரர்கள் அனுப்பினார்கள். அவன் வழியிலே மயங்கி விழுந்து இறந்துவிட்டான் என்றும் மற்ற சில புராணங்கள் கூறுகின்றன. இரண்டு வகையாகப் பிரிக்கப்படும் புராணங்கள் கதைகள் வேறு சொன்னாலும், அந்த ஓட்டம் தொடங்கிய இடமும், தினமும் ஒன்றுதான் என ஆய்வாளர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். மாரத்தான் நகரிலிருந்து மாரத்தான் பிறந்த தினம் இன்று.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

எந்தெந்த உணவில் எத்தனை கிராம் புரதம் நமக்கு கிடைக்கும்… பட்டியல் இதோ… (சைவம், அசைவம் இரண்டும்)

Next post

அமீரகத்தில் சோஷியல் மீடியா சட்டங்களை மீறினால் சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம்!! நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சைபர் கிரைம் விதிகள் இங்கே…

Post Comment

You May Have Missed