இந்த 8 அறிகுறி இருந்தால் உடம்புல கழிவு தேங்கி இருக்குன்னு அர்த்தமாம்!

நமது உடல் சிறப்பாக செயல்படும் போது உடலில் இருக்கும் நச்சுக்கள் தேங்கியிருந்தால் ஆற்றல் குறையலாம். அப்போது உடலில் இருக்கும் கழிவை வெளியேற்ற உடல் பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அப்படியான அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

உடல் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் அடிக்கடி உடல் நிலை சரியில்லை. தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற தோல் மற்றும் செரிமானப்பிரச்சனை போன்றவற்றை அனுபவித்தால் அது சாதாரணமானது அல்ல. ஆயுர்வேதத்தின் படி அது உங்கள் உடலை சுத்தப்படுத்த சொல்லும் அறிகுறி ஆகும். அப்படியான அறிகுறிகளில் பொதுவானவற்றை இப்போது தெரிந்துகொள்வோம். அதிலிருந்து எப்படி மீள்வது என்பதையும் அறியலாம்.

​தூக்கத்தில் பிரச்சனை இருந்தால் அது உடல் கழிவுகளை குறிக்கலாம்

அசுத்தங்கள் குவிவது நல்ல தூக்கத்தை அளிக்கும் மெலடோனின் அளவை குறைக்கலாம். தாமதமாக எழுந்திருப்பது ஆரோக்கியமானது அல்ல. இதனால் நாள் முழுவதும் தூக்கத்தில் இருக்கலாம். நிம்மதியான தூக்கத்துக்கு பிறகு காலை எழுந்த உடன் கார்டிசோல் என்ற ஹார்மொன் மன அழுத்தத்தை குறைத்து உங்களை தயார் படுத்த உதவுகிறது. நாள் முடிவில் படிப்படியாக குறையும். ஆனால் தூக்கமின்மை கார்டிசோலின் அளவில் ஏற்றத்தாழ்வுகளை உண்டு செய்கிறது. இதனால் தூங்குவதில் சிரமம் அல்லது தூக்கமின்மை உண்டாகலாம். இது பல பிரச்சனைகளை உண்டு செய்யும்.

​சோர்வாக இருப்பது உடல் நச்சுத்தன்மையின் அறிகுறியா?​

உடல் சோர்வாக இருப்பது நச்சுத்தன்மையின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று. காஃபின் மற்றும் பிற வெளிப்புற தூண்டுதல்கள் கூட உற்சாகப்படுத்துவதை தடுக்கலாம். சோர்வாக காலை வேளையில் உணர்ந்தால் எந்த உற்சாகமும் இல்லாமல் இருந்தால் உடலில் நச்சுத்தன்மை இருக்கலாம். நாள் முழுக்க சோர்வு என்பது மோசமான ஒன்று. இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும். நீண்ட காலம் இது தொடர்ந்தால் மூளை மற்றும் அட்ரினல் சுரப்பிகள் சரியாக செயல்படாத ப்போது அட்ரீனல் சோர்வு உண்டாகலாம். இது நச்சுகள்ம் வீக்கம், மன அழுத்தம் மற்றும் இரசாயன ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருர்ந்து அதிக கார்டிசோல் உண்டாகலாம்.

​குடல் இயக்கங்கள் சீராக இல்லாவிட்டால் உடல் நச்சுத்தன்மை இருக்குமா?

குடல் இயக்கங்கள் சீராக இல்லை சில நேரங்களில் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் தளர்வான நிலை என்பது உடல் நச்சு சேர்ந்திருப்பதை குறிக்கலாம். எதை சாப்பிட்டாலும் அஜீரணம் ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக உணர்கிறீர்கள். இவை நச்சு அதிகரிப்பதன் சில பொதுவான அறிகுறிகளாகும். உணவில் செரிமான அமைப்பு செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டால் உடலில் கழிவுகள் தேங்கலாம். இதனால் செரிமானக்கோளாறு, வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்றவை இருந்தால் நச்சு நீக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

​வாய் துர்நாற்றம் உடல் துர்நாற்றம் இருந்தால் அது நச்சு அறிகுறியா?

வாய் துர்நாற்றம் மற்றும் உடல் துர்நாற்றம் எப்போதும் உடல் நச்சுக்களை உண்டு செய்யலாம். விரும்பத்தகாத உடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றம் இருந்தால் நச்சுக்கள் உச்சநிலையை அடைந்திருப்பதற்கான அறிகுறியாகும். வாய் துர்நாற்றத்துக்கு எதுவுமே பலனளிக்காத நிலையில் அது உடல் நச்சு குறிக்கும் அறிகுறிகளே ஆகும்.

​எடையை குறைக்க முடியவில்லையெனில் அது உடல் நச்சு குறிக்கும் அறிகுறியா?​

எடை அதிகரிப்பு என்பது உடலில் உள்ள நச்சுத்தன்மையின் அறிகுறிகளில் ஒன்றாகும். நச்சுகளின் குவிப்பு வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. இதனால் எடை இழப்பு உண்டாகாமல் எடை அதிகரிக்க செய்கிறது. உடல் கொழுப்பு செல்களை நச்சுத்தன்மையை விரிவுப்படுத்தலாம். இந்த கொழுப்பு செல்களை உடைத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியிடுவது தேவையற்ற எடை அதிகரிப்புக்கு வழிவகுப்பது பாதுகாப்பற்றது என்று உடல் அங்கீகரிக்கிறது. இந்நிலையில் உடல் சரியாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகிறது.

​தோலில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு உடல் நச்சு தேக்கம் காரணமாக இருக்கலாம்!​

தோல் வெடிப்புகள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் உறுப்புகளில் ஒன்று. கல்லீரல் இரத்தத்தில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுபொருள்களை வடிகட்டுவதற்கும் அகற்றுவதற்கும் முதன்மையாக பணி செய்கிறது. அவற்றில் தேக்கம் அடைய முயற்சிக்கும் போது தோல் உதவ முயற்சிக்கிறது.

சில நச்சுக்கள் தோலுடன் சில இராசயனஎதிர்வினைகளை உருவாக்குகின்றன. இது முகப்பரு, தடிப்புகள், கொதிப்பு மற்றும் அரிக்கும் தோலழற்சியை உண்டு செய்கிறது.

​தலைவலி வருவது உடலில் நச்சு இருப்பதன் அறிகுறியா

தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் காரணமும் கண்டறியப்படவில்லை எனில் அதற்கு காரணம் மூளையில் இருக்கும் நச்சுக்கள் தான். செயற்கை இனிப்புகள் மற்றும் மோனோசோடியம் குளூட்டமெட் சுவையை அதிகரிக்கும்., மூளை ஆக்ஸிஜனேற்றத்தில் தலையிடலாம். மேலும் எம்எஸ்ஜிஆனது மூளை செல்களை கூட கொல்லலாம். மூளை செல்களை தூண்டும் எக்ஸிடோடாக்சினாக செயல்பாட்டுக்கு வழிவகுக்கும். உணவில் உள்ள நச்சுக்கள் தலைவலியை தூண்டலாம். இந்த நச்சுக்களை அகற்ற உடல் நச்சுத்தன்மையாக்குவது சிறந்தது.

​உடல் ஜங்க் ஃபுட் ஆசைக்கு ஏங்கினால் அதற்கு காரணம் உடல் நச்சு

தீராத ஏக்கங்கள் கொண்டிருப்பது உடல் ஒன்றை செயலிழந்து விட்டதற்கான அறிகுறியாகும். பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் ஹார்மோன் அளவை உயர்த்தலாம். இதனால் உடல் இந்த குப்பை உணவுகளுக்கு கெஞ்சுகிறது ஆரோக்கியமான உணவுக்கு மாறுவது நிச்சயமாக ஹார்மோன்களை அதன் செயல்பாட்டுக்கு திரும்ப பெறும். மோசமான உணவுகள் உடலில் நச்சு உண்டு செய்யலாம். மேலும் எடை அதிகரிப்பையும் தூண்டலாம்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

1 comment

  • comments user
    创建Binance账户

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.info/register?ref=P9L9FQKY

    Post Comment

    You May Have Missed