ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திர தினத்ததை கொண்டாடுவது போல் அதே தினத்தில் சில நாடுகள் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள்!!

தென் கொரியா: ஆகஸ்ட் 15ஆம் தேதி அங்கு குவாங்போக்ஜியோல் என்ற தினம் கொண்டாடப்படுகிறது. 1945ஆம் ஆண்டு ஜப்பானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து கொரியத் தீபகற்பம் விடுவிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததையும் ஜப்பான் சரணடைந்ததையும் இது குறிக்கிறது.

அன்று ஜப்பான் முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடியேற்ற விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் நடக்கும்.. இந்த குவாங்போக்ஜியோல் ஜப்பான் கலாச்சாரத்தில் முக்கியத்துவ இடத்தை பிடித்துள்ளது. இது தென் கொரியாவின் இறையாண்மை, சுதந்திரத்தைக் குறிக்கிறது.

பஹ்ரைன்: பஹ்ரைன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி Accession Day கொண்டாடப்படுகிறது. கடந்த 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஷேக் இசா பின் சல்மான் அல் கலீஃபா மன்னராகப் பதவியேற்றதைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அசிஸின் டே கொண்டாடப்படுகிறது. ஷேக் இசா பின் சல்மான் ஆட்சியில் பஹ்ரைன் அதிக அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெற்று வருகிறது. இதைக் கொண்டாடும் வகையிலேயே அங்குப் பல விழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடத்தப்படும்.

லிச்சென்ஸ்டீன்: ஐரோப்பாவில் உள்ள சிறு நாடு லிச்சென்ஸ்டீன்.. அங்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி லிச்சென்ஸ்டீனின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.. 1866ஆம் ஆண்டில் இளவரசர் ஜோஹன் I அதிகாரத்திற்கு வந்ததைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதியை இவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாள் நாட்டில் இசைக்கச்சேரி, வானவேடிக்கைகள் ஆகியவை நடக்கும்.. இந்த நாளில் மக்கள் தங்கள் நாட்டின் பெருமை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வட கொரியா: தென் கொரியாவைப் போலவே வட கொரியாவின் தேசிய விடுதலை தினமும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஜப்பானியக் காலனித்துவ ஆட்சி 1945இல் முடிவுக்கு வந்ததையே இது குறிக்கிறது. இந்த நாளில் பல கலாச்சார நிகழ்ச்சிகள், ராணுவ அணிவகுப்புகள் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும்… வடகொரியக் கலாச்சாரத்தில் ஆகஸ்ட் 15 மிக முக்கிய நாளாகப் பார்க்கப்படுகிறது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

3 comments

  • comments user
    Binance

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.com/join?ref=P9L9FQKY

    comments user
    open binance account

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

    comments user
    免费Binance账户

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

    Post Comment

    You May Have Missed