மெல்லிய சுருட்டும் வடிவிலான புதிய வகை லேப்டாப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இனி மடிக்கணினிகளை சுருட்டியும் மடக்கியும் வைத்துக் கொள்ள முடியும். கணினிகளை உடனெடுத்து சொல்ல முடியாது என்ற நிலைக்கு தீர்வாக மடிக்கணினிகள் வந்தன. மடிக்கணினிகளை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். இவற்றைச் சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் எப்போதும் மின்சார த்தை எதிர்பார்ப்பதும் தேவையற்றதாக போனது. இந்த நிலையில் அதை காட்டிலும் புதிய அப்டேட்டுகள் உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மெல்லிய, இலகுவான, சுருட்டி பயன்படுத்தக்கூடிய லேப்டாப்புகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு ரோல் டேப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது oled டிஸ்ப்ளே ஸ்கிரீன் தன்மையைக் கொண்டது. இவை மெல்லியதாகவும், இலகுவானதாகவும், அதிக பருமன் அற்றதாகவும் இருக்கும். இவற்றைச் சார்ஜ் செய்ய பவர் அடாப்டர்கள் தனியாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.இதன் முழுமையான அளவும் டிஸ்ப்ளே ஆக இருக்கும். இதற்கு தனியான கீபோர்ட் கிடையாது. டிஸ்ப்ளே வழியாகவே டைப் செய்ய முடியும். தொடுத்திறை வழியாக இதன் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் கட்டுப்படுத்த முடியும். ஸ்கேனர், கேமரா, டேட்டா ஸ்டோரேஜ் என்று கணினியில் உள்ள அனைத்து பயன்பாடுகளையும் இந்த ரோல் டாப்புகளை பயன்படுத்துவது பெற முடியும்.
இதற்கு அதிக இடங்களை ஒதுக்க தேவையில்லை, மேலும் இது புதிய தோற்றத்தில் காட்சியளிப்பதால் தோளில் மாட்டிக் கொண்டு சென்றுவர முடியும்.
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...