Last Updated on: 3rd January 2024, 07:03 pm
திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி, புதிய விமான நிலையம் கட்டடம் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்புவிழாவிற்காக காத்திருந்தது. புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த முனையம் 60 ஆயிரத்து 723 சதுர மீட்டர் பரப்பளவில், 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதிய விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் அதிகமான மக்கள் பயன்படுத்தும் விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது.