8.8 C
Munich
Monday, October 14, 2024

இன்ஸ்டாகிராம் போஸ்ட் கேப்ஷனில் இனி Poll வைக்கலாம்.. மகிழ்ச்சியில் பயனர்கள்..!

Instagram down or not working 05-03-2024?

இன்ஸ்டாகிராம் போஸ்ட் கேப்ஷனில் இனி Poll வைக்கலாம்.. மகிழ்ச்சியில் பயனர்கள்..!

Last Updated on: 6th February 2024, 09:45 pm

உலகிலேயே மிகவும் பிரபலமான சோசியல் மீடியா தளங்களில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் படிப்படியாக வளர்ந்து தற்போது பெரும்பாலான பயனர்களின் பொழுதுபோக்கு அங்கமாகவே மாறிவிட்டது. இந்த தளத்தில் போட்டோக்கள், வீடியோக்கள், ரிலீஸ் என பயனர்கள் தான் விரும்பும் விஷயங்களை பதிவேற்றுவது வழக்கம். இதன் மூலமாக பெரும் பொழுதுபோக்கு தளமாக இன்ஸ்டாகிராம் வளர்ந்து வருகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், அதன் பயனர்களை தக்க வைக்க அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல சோதனை முயற்சிகளை இன்ஸ்டாகிராம் எடுத்து வந்த நிலையில், இப்போது Poll அம்சத்தை போஸ்டில் வைக்கும்படி புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் Poll என்பது, ஒரு புகைப்படத்தை பதிவிடும் நபர் ஏதேனும் ஒரு கருத்தைக் கூறி, அதற்கு ஏற்ற பதில் அல்லது பயனர்களின் விருப்பம் எதுவாக இருக்கும் என்பதைப் பார்வையாளர்களை தேர்வு செய்ய வைக்கும் ஒரு முறையாகும். 

இது தொடக்கத்தில் விளம்பரதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் ஸ்டோரிகளில் ஒவ்வொரு பயணரும் Poll வைக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. இதற்கு இன்ஸ்டாகிராம் வாசிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்ததால், ஒவ்வொருவரும் இனி தங்களது பதிவிடும் போஸ்ட்களில் கேப்ஷனுக்கு பதிலாக Poll வைக்கும் ஆப்ஷனை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. எனவே இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவர்கள் விருப்பம் போல பதிவுகளுக்கு Poll வைத்து பார்வையாளர்களை அவர்களின் பக்கம் இழுக்கலாம். 

முழுக்க முழுக்க பார்வையாளர்களைக் கவர்வதற்காகவே இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மேலும் பல புதிய அம்சங்களை வெளியிடும் நோக்கில் இன்ஸ்டாகிராம் தொடர்ந்து வேலை செய்து வருகிறது. அவை ஒவ்வொன்றாக வரும் காலங்களில் சோதனை செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிதாக வந்துள்ள Poll ஆப்ஷனை இப்போதே பயனர்கள் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். ஒருவேளை உங்களுக்கு இந்த அம்சம் வரவில்லை என்றால், உடனடியாக உங்களது இன்ஸ்டாகிராமை அப்டேட் செய்யுங்கள். ஏனெனில் சமீபத்திய பதிப்பில் மட்டுமே இது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here