உம்றாவின் போது பெண்களின் ஆடை குறித்து அமைச்சரகம்

Post Views: 68 உம்றா கடமையை நிறைவேற்றும் போது பெண்களின் ஆடை குறித்து ஹஜ் உம்றா அமைச்சகம் தெரிவிக்கையில், உம்றாவின் போது பெண்கள் பின்வரும் நிபந்தனைகளுடன் எந்த விதமான ஆடையையும் அணிந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. ஆடை அகலமாகவும், தளர்வாகவும் இருக்கவேண்டும். ஆடைகளில் கண்களைக் கவரும் அலங்காரங்கள் எதுவும் இடம் பெற்றிருக்கக்கூடாது. ஆடை முழுமையாக உடலை மூடி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

சவுதி தேசிய தினத்தில் விமான சாகசம்!

Post Views: 727 சவுதி அரேபியாவின் 93 வது தேசிய தினத்தை முன்னிட்டு 13 நகரங்களில் விமான சாகசம் மற்றும் ஜித்தாவில் கடற்கரையில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கல்வி கற்க விருப்பமா?

Post Views: 461 மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகம், உம் அல் குரா பல்கலைக்கழகம் – மக்கா, இமாம் முஹம்மத் இப்னு சவுத் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் – முதலிய பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. தகுதி நிபந்தனைகள் : ரியாத் வயது : 18-25 தனிச்சிறப்பம்சங்கள் : தங்குமிடம் | மாதாந்திர ஊக்கத்தொகை | இலவச கல்வி மருத்துவ சேவை | விடுமுறைக்கான விமான டிக்கெட் விண்ணப்பிக்கும் இணையதளம்: https://studyinsaudi.moe.gov.sa/ விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் மாதிரி … Read more

அரபு மொழி பேசாதவர்களுக்காக புதிய மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது சவுதி NAJIZ.

Post Views: 63 ரியாத்: நீதி அமைச்சகம் சமீபத்தில் “Najiz.sa” என்ற ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பு மையத்தின் ஆன்லைன் தளத்தின் மூலம் “ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான கோரிக்கை” சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சியானது அரபியை முதன்மை மொழியாகப் பேசத் தெரியாத நபர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த மின்னணு சேவை பயனாளிகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நீதித்துறை மற்றும் பிற தொடர்புடைய நபர்களுடன் திறம்பட தொடர்புகொள்வதில் அவர்களுக்கு உதவக்கூடிய மொழிபெயர்ப்பாளரைக் கோர அனுமதிக்கிறது. இந்தச் சேவையைப் பயன்படுத்த, … Read more

சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைவு

Post Views: 60 சவுதி அரேபியாவில் போக்குவரத்து சட்டங்கள் மற்றும் விதிகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக, சாலை விபத்துக்களில் 35 சதவிகிதம் குறைவு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சாலை விபத்துக்களில் 9311 பேர் இறந்துள்ளதாகவும், இது 6651 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துக்களை 50 சதவிகிதமாக குறைப்பதை இலக்காக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தனிநபர் தகவல்களை பரிமாறுவது கிரிமினல் குற்றம்!

Post Views: 99 சவுதி அமைச்சரவையில் 2021-இல் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் தகவல்கள் பாதுகாப்புச் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி, பொது இடங்கள், விருந்து நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ஆகிய இடங்களில் எடுக்கப்படும் தனிநபர்களின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ வெளியிடுவது குற்றமாகும். மேலும், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் சேகரிக்கப்படும் தனிநபர் விபரங்களை பிறருக்கு விற்பதோ, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உள்ளிட்டவை கடுமையான அபராதத்திற்குரிய குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் முன்னேறி வரும் பெண்களின் நிலை!!

Post Views: 58 பழமைவாத நாடாக கருதப்படும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்கு அதிகரித்துள்ளது.  சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2016ம் ஆண்டு விஷன் 2030என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எண்ணெய் வருவாய் மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  சவுதி அரேபியாவில் உள்ள வேலைகளில் 36% இடங்களில் பெண்கள் வேலை செய்வதாக சர்வதேச செலாவணி … Read more

பயணத்தை ரத்து செய்தால் 4000 ரியால் அபராதம்!

Post Views: 108 சவுதிஅரேபியாவில் செயல்படும் ஸ்மார்ட் டாக்ஸிகளின் ஓட்டுனர்கள், ஒப்புக்கொண்ட பயணங்களை ரத்து செய்தால் அவர்களுக்கு 4000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் டாக்ஸி ஓட்டுநர்கள் பொது போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியை பெற்றிருந்தால், அவர்கள் சவுதியின் மற்ற நகரங்களிலும் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் மாணவர்களுக்கு 8 விதமான தண்டனைகள் கூடாது!

Post Views: 66 சவுதியில் மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிறுத்துவது, கூட்டாக தண்டனைகள் விதிப்பது, ஆளுமையை கேலி செய்வது, தவறான செயலை செய்ய தூண்டுவது, கட்டாய விடுமுறை அளிப்பது ஆகிய தண்டனைகள் விதிப்பதை கல்வி அமைச்சகம் தடை செய்துள்ளது. தண்ணீர் அருந்தவும், நேரத்திற்கு உணவு உண்பதற்கும், கழிவறைக்கு செல்வதற்கும் தடை விதிக்கக்கூடாது எனவும், உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களுக்கும் அமைச்சம் தடை விதித்துள்ளது.

சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை ஒட்டி பொதுவிடுமுறை!

Post Views: 104 சவுதி அரேபியாவின் 93ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 23 சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சம் தெரிவித்துள்ளது.தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 24இன் படி இந்த விடுமுறையை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. “We dream We Achieve” என்ற முழக்கத்தோடு இந்த ஆண்டின் தேசிய தினம் கொண்டாடப்படுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.