குவைத் எண்ணெய் கிணறுகள்… ரூ.4.65 லட்சம் கோடியில் தாறுமாறு பிளான்… ஆடிப் போன உலக நாடுகள்!

Post Views: 119 வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், பெட்ரோலிய வளத்தின் அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. உலகிலேயே பண மதிப்பில் உச்சத்தில் இருக்கும் நாடு என்றால் அது குவைத் தான். இதற்கு அடிப்படையான காரணம் எண்ணெய் வளம். தேசிய வருவாயை எடுத்து கொண்டால் சர்வதேச அளவில் 5வது இடத்திலும், ஜிடிபி மதிப்பில் எடுத்து கொண்டால் 12வது இடத்திலும் இருக்கிறது. கொழிக்கும் எண்ணெய் வளம்ஒவ்வொரு ஆண்டும் எண்ணெய் வளத்தை மேம்படுத்தவும், இதுதொடர்பாக வர்த்தகத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் 4.4 அளவில் பதிவானதால் பீதியடைந்த மக்கள்.

Post Views: 85 ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ரிக்டர் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 7.08 மணி அளவில் மிகவும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கே தென்கிழக்கில் 196 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் 4.4 ஆக பதிவாகியுள்ளது என ஆப்கானிஸ்தான் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் … Read more

நிலவை சேதப்படுத்திய ரஷ்யாவின் லூனா 25… நாசா வெளியிட்ட பகீர் தகவல்!

Post Views: 59 ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான் விண்கலம் அனுப்பட்டு சுமார் 15 நாட்களுக்கு பிறகே லூனா 25 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரஷ்யா முடிவுஇருப்பினும் சந்திரயான் 3 விண்கலத்திற்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் லூனா 25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்யா முடிவு செய்திருந்தத. அதாவது ஆகஸ்ட் 21ஆம் … Read more

தர்மன் சண்முகரத்னம் மட்டுமில்லை..வெளிநாடுகளில் உயர்பொறுப்பில் இருக்கும் இந்திய வம்சாவளியினர்! லிஸ்ட்

Post Views: 60 சென்னை: சிங்கப்பூரின் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் தமிழரான தர்மன் சண்முகரத்னம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை குடியரசு தலைவர் கமலா ஹாரிஸ் மட்டும் இன்றி வெளிநாடுகளில் உயர் பொறுப்பில் இருக்கின்ற இந்திய வம்சாவளியினர் யாரெல்லாம் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள குட்டி நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரின் அதிபராக உள்ள ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் … Read more

நோபல் பரிசு விழாவில் பங்கேற்க ரஷ்யா, ஈரான், பெலாரஸ் நாடுகளுக்கு தடை 

Post Views: 73 ஸ்வீடனில் நடைபெற உள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைக்கப் போவதில்லை என்று நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு, உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் தூதர்களை நோபல் அறக்கட்டளை புறக்கணித்திருந்தது. இந்த நிலையில், கடந்த வியாழன் (ஆக.31) அன்று வெளியிட்ட அறிவிப்பில் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு … Read more

கடும் விலை உயர்வைக் கண்டித்து பாகிஸ்தானில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் – மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

Post Views: 67 கராச்சி: பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசை எதிர்த்து பாகிஸ்தான் வணிகர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று பாகிஸ்தானில் நாடு முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பில் ஈடுபட்டனர். ஜமாத் – இ – இஸ்லாமி கட்சித்தலைவரும் முன்னாள் செனட்டருமான சிராஜுல் ஹக் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, வணிகர்கள், தொழில் அமைப்புகள், சந்தை கூட்டமைப்புகள், … Read more

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: ரூ.300-ஐ கடந்த பெட்ரோல், டீசல் விலை

Post Views: 326 கராச்சி: வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.300ஐ தாண்டியுள்ளது. தற்போது அங்கு பெட்ரோல் ரூ.305.56-க்கும், டீசல் ரூ.311.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.14.91 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.18.44 உயர்த்தியது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.305.56-க்கும், டீசல் ரூ.311.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் … Read more

சிங்கப்பூருக்கு மட்டும் அரிசி ஏற்றுமதிக்கு ஓகே சொன்ன இந்தியா… என்ன காரணம் தெரியுமா?

Post Views: 53 கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத பச்சை அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. சமீப காலமாக அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு புழுங்கல் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி விதித்தது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட … Read more

தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராகிறார் – முழு விவரம்

Post Views: 64 சிங்கப்பூர்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக பதவியேற்க உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ம்தேதி நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மூன்று வேட்பாளர்களும் … Read more

ஜோகன்னஸ்பர்க் நகரில் பயங்கர தீ விபத்து – 73 பேர் உயிரிழப்பு

Post Views: 72 தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஐந்து அடுக்கு கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதில் உள்ளே இருந்தவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இந்த தீ விபத்தில் இதுவரை 73 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more