இங்கிலாந்தில் மனிதர்களுக்கு பரவ தொடங்கியது H1N2 வைரஸ்

Post Views: 72 பன்றி வைரஸ் என்று அழைக்கப்படும் H1N2 வைரஸ் இங்கிலாந்தில் மனிதர்களுக்கு பரவ தொடங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம்(UKHSA) தெரிவித்துள்ளது.H1N2 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், உடல்நலக்குறைவால் லேசான அசௌகரியத்தை அனுபவித்தார். ஆனால், அதன் பிறகு, அவர் பூரண குணமடைந்துவிட்டார் என்று UKHSA கூறியுள்ளது,H1N1, H1N2 மற்றும் H1N3 ஆகியவை பன்றிகளில் காணப்படும் மூன்று முக்கிய வகை காய்ச்சல் உண்டாக்கும் வைரஸுகளாகும். நோய்வாய்ப்பட்ட பன்றிகளை தொடர்பு கொள்வதால் இந்த வகை வைரஸுகள் மனிதர்களுக்கும் பரவக்கூடும்.இந்நிலையில், … Read more

பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம்..!

Post Views: 77 பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் ஆகிய நாடுகளில் சில நிமிட இடைவேளைகளில் மூன்று வெவ்வேறு நிலநடுக்கங்கள் உணரப்பட்டது.பாகிஸ்தானில் இன்று காலை 3:38 மணியளவில் ரிட்டர் அளவில், 4.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பின்னர் சில நிமிடங்களில், ரிட்டர் அளவில் 6.5 அளவிலான நிலநடுக்கம் பப்புவா நியூ கினி நாட்டின் வடக்கு கடற்கரை பகுதியில் உணரப்பட்டது.பசிபிக் தீவு நாட்டின், கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெகாக் நகரத்திலிருந்து சிறிது … Read more

விசா இல்லாமல் மலேசியா உங்களை அன்புடன் வரவேற்கிறது!

Post Views: 415 மலேசியாவுக்கு விசா இல்லாமல் வர இந்தியா, சீனா குடிமக்களுக்கு அனுமதி அளித்து அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவிப்பு. டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த நடைமுறை மூலம் 30 நாட்கள் விசா இன்றி தங்க முடியும்! நடப்பாண்டு ஜனவரி – ஜூன் வரை மட்டும் 28 லட்சம் இந்தியர்களும், 4.98 லட்சம் சீனர்களும் அந்நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் 13 மாத குழந்தை கொரோனாவால் மரணம்..!

Post Views: 121 சிங்கப்பூரில் கடந்த 13 மாத குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் அக்டோபர் 12 அன்று இறந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.12 வயதிற்குட்பட்டவர்களில் 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நிகழும் முதல் மரணம் இதுவாகும். பாதிக்கப்பட்ட குழந்தை வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகளைப் பெறவில்லை எனக் கூறப்பட்டது. சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையான கொரோனா வைரஸ் ஆபத்து இளம் குழந்தைகளில் குறைவாக இருந்தாலும், வேறு உடல்நல பிரச்சினை உள்ளவர்களுக்கு இது இன்னும் பாதிக்கும் அபாயம் … Read more

விசா இல்லாமல் வருவதற்கு 6 நாடுகளுக்கு அனுமதி – சீனா அறிவிப்பு

Post Views: 48 பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்க உள்ளது.டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு குடிமக்களும் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்கி உள்ளது. சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விசா இல்லாமல் சீனா … Read more

பாத்திரம் கழுவாம இருந்தா அபராதம்.. புது ரூல் பிறப்பித்த சீன அரசு!

Post Views: 114 தெற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாண அரசாங்கம், மக்களிடம் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பழக்கத்தை கொண்டு வர சில கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமையல் பாத்திரங்களை கழுவாதவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.116 அபராதம் விதிக்கிறது. படுக்கையை ஒழுங்காக மடித்து வைக்காதவர்களுக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை நன்றாக சுத்தம் செய்யாதவர்களுக்கும் இதே அபராதத் தொகை விதிக்கப்படுகிறது.அதேபோல் தரையில் சம்மனமிட்டு உட்கார்ந்து சாப்பிட்டால் ரூ.233 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் வீட்டில் … Read more

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை.. அண்டார்டிகாவில் இருந்து பிரிந்தது..வேகமாக நகர்வதால் அபாயம்

Post Views: 25 நியூயார்க் மாநகரை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய பனிப்பாறையால் தெற்கு ஜார்ஜியா தீவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 1986ம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை.. லண்டன் மாநகரை விட இரு மடங்கும், நியூயார்க்கை விட 3 மடங்கும் பெரியதாகும். A23a என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த பாறையால் தெற்கு ஜார்ஜியா … Read more

இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து வியட்நாமும் அறிவித்தது.. விசா தேவை இல்லையாம்… இனிமே இந்தியர்களுக்கு ஜாலிதான்!

Post Views: 67 இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தியர்களுக்கு விசா இல்லா நுழைவுக்கு சமீபத்தில் அனுமதி அளித்தனர். இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் இந்த அறிவிப்புக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அதே வாய்ப்பை வியட்நாமும் வழங்கவுள்ளது. அண்டை நாடான வியட்நாம் விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருகை புரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வியட்நாம் அரசின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சர் Nguyen Van Hung, இந்தியர்கள் மற்றும் … Read more

மீண்டும் மன்னர் ஆட்சி கோரி போராட்டம் – பாதுகாப்பை பலப்படுத்தியது நேபாள அரசு

Post Views: 154 காத்மாண்டு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அது முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் மன்னராட்சி கோரி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் … Read more

குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா: சீன அரசு தீவிர கண்காணிப்பு – அறிக்கை கோரும்d உலக சுகாதார நிறுவனம்

Post Views: 65 பீஜிங்: சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த நிமோனியா தொற்று தொடர்பான தகவல்களைப் பகிரும்படி அந்நாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.ஊடகச் செய்திகளின்படி சீன மருத்துவமனைகளில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துவரப்படும் போக்கு மிக அதிகமான அளவில் அதிகரித்துள்ளது. குழந்தைகள் அனைவருமே சுவாசக் கோளாறுடனேயே அழைத்துவரப்படுகின்றனர் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது. இந்தச் சூழலில் SARS-CoV-2 … Read more