சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தலாம்: சீனாவில் புதிய கட்டுப்பாடு

Post Views: 218 சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து சீன அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான இணைய சேவைகளை பெற முடியாது. மேலும், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு … Read more

வலிமைவாய்ந்த டொக்சூரி சூறாவளி – எதிர்கொள்ளத் தயாராகும் சீனா

Post Views: 155 சீனாவின் பெருநிலப் பகுதி டொக்சூரி (Doksuri) சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகிறது.அதனை மாபெரும் சூறாவளி என்று சீனா கூறுகிறது. நாளை (28 ஜூலை) சூறாவளி வீசும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதனால் பெயச்சிங் எச்சரிக்கை நிலையை உயர்த்தியுள்ளது. நாளை குவாங்டொங்கிற்கும் (Guangdong) பூஜியானுக்கும் (Fujian) இடையில் அது கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் அந்த வட்டாரத்தை உலுக்கும் 2ஆவது சூறாவளி அது. வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படக்கூடும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். … Read more

அடுத்தடுத்து சரிந்த மழலையர் பள்ளி குழந்தைகள்.. உணவில் விஷம் வைத்த ஆசிரியர்.. பகீர் சம்பவம்

Post Views: 124 பெய்ஜிங்: சீனாவில் கிண்டர் கார்டன் ஆசிரியை ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு விஷம் வைத்த கொடூர சம்பவத்தில் அவர் மீது சீன நீதிமன்றம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. நமது சமூகத்தில் எப்போது ஆசிரியர்களுக்குத் தனியாக ஒரு மதிப்பு இருக்கவே செய்கிறது. வரும் கால சமூகத்தினரை ஆசிரியர்கள் தான் செதுக்குகிறார்கள் என்பதால் ஆசிரியர்களுக்குத் தனி மரியாதை இருக்கவே செய்கிறது. அதேநேரம் சில ஆசிரியர்கள் மிகவும் கொடூரமான கீழ்த்தரமான காரியங்களிலும் ஈடுபடவே செய்கிறார்கள். அப்படியொரு … Read more

சீனா | உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் பலி; பலர் காயம்

Post Views: 101 பெய்ஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம், “சீனாவின் யின்சுவான் நகரில் புதன்கிழமை இரவு உணவகம் ஒன்றில் வாயு கசிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உணவகத்தில் டிராகன் திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி கொண்டனர். இதில் 31 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் பலர் பள்ளி … Read more

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் மசூதியை இடிக்க எதிர்ப்பு: முஸ்லிம்கள் போராட்டம்

Post Views: 76 பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அரசாங்கம் மதம் மற்றும் சமூகத்தின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், சீனாவின் யுன்னான் மாகாணம், யுக்சி நகரில் நஜியாயிங் என்ற மசூதி உள்ளது. இது மிகவும் பழமையானதாகும். இந்த மசூதியில் உள்ள நீல நிற குவிமாடப் பகுதிகளையும், கோபுரங்களையும் (மினார்கள்) இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை சீன அரசு, கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. … Read more

பூமிக்குள் 10,000 மீட்டர் ஆழத்திற்கு துளை தோண்டி வரும் சீனா! எதற்காக?

Post Views: 62 சீனாவில் விஞ்ஞானிகள் பூமியில் 10,000 மீட்டர் (32,808 அடி) துளை தோண்டத் தொடங்கியுள்ளனர். பூமிப் பாறையின் 10 அடுக்குகளைத் தோண்டி, 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டேசியஸ் சிஸ்டம் எனப்படும் அடுக்கு, பாறைகளை அடைவதற்காக இந்த முயற்சியை சீன விஞ்ஞானிகள் முன்னனெடுத்துள்ளனர். சீனாவின் ஆழமான ஆழ்துளைக் கிணறுக்கான துளையிடும் பணி செவ்வாயன்று நாட்டின் எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியது. செவ்வாயன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம் கனிம வளங்களை அடையாளம் காணவும், … Read more

மீண்டும் கொரோனா.. அதே சீனாவில்.! ஒரு மணி நேரத்தில் 3.8 லட்சம் பேரை பாதிக்கும்! கிளம்பிய அடுத்த அலை

Post Views: 75 பெய்ஜிங்: கொரோனா பெருந்தொற்றை நாம் கடுமையாகப் போராடி ஒழித்த நிலையில், சீனாவில் மீண்டும் மற்றொரு புதிய அலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019இல் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளையும் வைத்துச் செய்துவிட்டது. அலை அலையாகத் தாக்கிய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் முதலில் ஆய்வகத்தில் தோன்றியதா அல்லது மார்கெட்டில் தோன்றியதா என்பது 4 ஆண்டுகளுக்கு பிறகும் … Read more

“மெகா பிரச்சினை..” கையை பிசையும் சீனா.. சாதனையே சோதனையாக மாறியது.. இந்தியாவுக்கான வார்னிங்

Post Views: 95 பெய்ஜிங்: சீனாவில் மக்கள்தொகை சரிவது என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனிடையே நிலைமையைச் சரி செய்ய அந்நாட்டு அரசு புதியதொரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த 30, 40 ஆண்டுகளாக அங்கே மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்கள். குறிப்பாக ஒரு குழந்தை பாலிசி எடுத்து வந்தார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அவர்கள் … Read more