அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் – 2 பேர் பலி
அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே அந்நாட்டு சுதந்திர தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் ஹண்டிங்டவுன் கடற்கரை அருகே நேற்று முன் தினம் இரவு கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
6 comments