ஆந்திராவில் பிறந்த பெண், அமெரிக்க நீதிபதியானார்; பாராட்டு குவிகிறது!
ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஜெயா படிகா என்ற பெண் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கலிபோர்னியா கவர்னர் பிறப்பித்து உள்ளார். ஜெயா படிகாவுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.கலிபோர்னியாவின் சக்ரமென்டோ கவுன்டி சுப்பரீயர் நீதிமன்ற நீதிபதியாக ஜெயா படிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கு அவர் 2022 முதல் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.ஜனநாயக கட்சியில் இருந்த இவர், கலிபோர்னியா மாகாண சுகாதார சேவையின் அட்டர்னி ஜெனரல் ஆகவும், கலிபோர்னியா கவர்னர் அலுவலக அவசர சேவை துறையிலும் பணியாற்றி உள்ளார். சான்டா கிளாரா சட்ட பல்கலையில் இளநிலை பட்டம் பெற்ற இவர், போஸ்டன் பல்கலையில் சர்வதேச உறவுகள் குறித்த படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
சீக்கிய நீதிபதி
அதேபோல் சீக்கிய மதத்தை சேர்ந்த ராஜ் சிங் பாதேஷாவை, பிரஸ்னோ கவுன்டி சுப்ரீயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கலிபோர்னியாவில் சீக்கியர் ஒருவர் நீதிபதியான பெருமை இவருக்கு கிடைத்து உள்ளது. இதற்காக அவரை பலர் பாராட்டி வருகின்றனர்.
2 comments