போருக்கும் வறுமைக்கும் இடையில் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வளர்ந்த கதை!!
ஆப்கானிஸ்தான் பல சிக்கல்களுக்கு இடையில் அன்றாட வாழ்வு மிகவும் கடினமாக இருக்கும் நாடாகும். தலிபானுக்கு எதிராக முடிவுறாத போர், கொடிய வறுமை, பொருளாதார சிக்கல்கள், புவி அரசியல் சிக்கல்கள் என பலவற்றால் சிக்கியுள்ளது. எனினும் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதிர்ச்சியான ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதன் செயல்பாடு மக்கள் மத்தியில் பெரிய புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் அளித்து, கிரிக்கெட்மீது அளப்பரிய ஆர்வத்தையும், வருகையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே அங்கு இருந்த பிரிட்டிஷ் மக்களால் கிரிக்கெட் விளையாடப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் அகதிகளாக அடைக்கலமாக இருந்த ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில்தான் கிரிக்கெட் பிரபலமடைந்து, அங்கு கிரிக்கெட் விளையாடிப் பழகினர். தங்கள் தாயகத்துக்கு திரும்பியபின், 1995-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முயற்சியால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு உருவாக்கப்பட்டது.
2004-ஆம் ஆண்டு பஹ்ரைன் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்ற வெற்றிதான் சர்வதேச அளவில் பெற்ற முதல் வெற்றியாகும். அதன் பிறகு, படிப்படியாக ஐசிசி சார்பில் நடத்தப்படும் வேர்ல்டு கிரிக்கெட் லீக் டிவிஷன்-5, டிவிஷன்-4 மற்றும் டிவிஷன்-3, ஐசிசி டி20, உலகக் கோப்பை போட்டி என வளர்ந்து வந்துள்ளது.
1 comment