Last Updated on: 5th September 2023, 11:15 am
டமாக் குழுமம் ரியல் எஸ்டேட், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. அந்த வகையில் துபாயில் உள்ள டமாக் ஹில்ஸில் புதிதாக ஒரு மால் (Damac Mall) திறக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. அகோயா பார்க், அகோயா ட்ரைவ், ட்ரம்ப் இண்டர்நேஷனல் கோல்ப் கிளப் என மூன்று பகுதிகளாக டமால் ஹில்ஸ் இருக்கிறது.
இந்த சூழலில் 1,10,000 சதுர அடியில் மிகவும் பிரம்மாண்டமாக மால் அமைந்துள்ளது. இதில் வர்த்தகம், அழகு சாதனம், உணவகம், பொழுதுபோக்கு எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பிரத்யேக ஷாப்பிங் அனுபவத்திற்கு டமாக் மாலிற்கு செல்லலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த மாலின் கட்டடக் கலையே மிகவும் கவரக் கூடியதாக இருக்கும் என்கின்றனர்.
ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கட்டமைத்து சர்வதேச தரத்திற்கு கொண்டு வந்துள்ளனர். டமாக் மாலில் 28 ஆயிரம் சதுர அடியில் ஸ்பின்னீஸ் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இதுதவிர ஸ்டார்பக்ஸ், பாபா ஜான்ஸ், வியட்நாமீஸ் புட்டீஸ், அமெரிக்கன் வேக்ஸ், அல் ஜாபர் ஆப்டிக்கல்ஸ், அல் ஐன் பார்மஸி, லிங்கோ பிளே ஏரியா ஆகியவை மிகவும் கவனம் ஈர்க்கும் கடைகளாக இடம்பெற்றுள்ளன.
உடற்பயிற்சி கூடமும், மெட்கேர் வசதியும்9 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட உடற்பயிற்சி கூட்டமும், 8 ஆயிரம் சதுர அடியில் மெட்கேர் மருத்துவ வசதிகளும் அமைந்துள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக வாகன நிறுத்தும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 400 வாகனங்கள் வரை நிறுத்த முடியும்.