அமீரகத்தில் கழிவுகளை வைத்து கட்டுமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் தொடங்கும் என தகவல்…!

அமீரகத்தில் கழிவுகளை வைத்து கட்டுமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் தொடங்கும் என தகவல்…!

Last Updated on: 5th October 2023, 10:03 am

துபாயில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற காலநிலை எதிர்கால வாரத்தில் (Climate Future Week -CFW), கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலை 2024இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மினிவிஸ் (Miniwiz) நிறுவனத்தின் CEO மற்றும் நிறுவனர் ஆர்தர் ஹுவாங் அவர்கள் பேசுகையில், உள்நாட்டில் சில மூலப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், கட்டுமானப் பொருளாக மாற்றுவதற்கும் ஒரு மேல்சுழற்சி ஆலையை நிறுவப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தி ஊடகங்களிடம் பேசிய ஹுவாங், அமீரகம் தன்னிறைவு பெற விரும்பினால், அதன் சொந்த குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும், கழிவுகளை கட்டுமானப் பொருட்களாக மறுசுழற்சி செய்வதற்கும், குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள இடங்களுக்கு அனுப்புவதற்கும் அமீரகத்தில் நிறைய சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் தயாரிப்பு:

சுற்றுச்சூழலில் எப்போதும் ஆர்வமுள்ள ஆர்தர், இருபது வருடங்களுக்கு முன்பு குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பயணத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார். முதன்முதலில் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் இருந்து காற்று மற்றும் சூரியனைப் பயன்படுத்தும் ஒரு சிறிய செல்போன் சார்ஜரை உருவாக்கத் தொடங்கியதாகவும், ஆரம்பத்தில் பல சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இறுதியாக, iPodஐ சார்ஜ் செய்யும் பேட்டரிக்கு சக்தி அளிக்க ஒரு சிறிய காற்றாலை ஜெனரேட்டரை அவரது குழு உருவாக்கியதாகவும், அந்த முதல் தயாரிப்பின் மூலம் $2.8 மில்லியன் சம்பாதித்ததாகவும் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

கழிவுப் பொருட்களை வைத்து கட்டுமானப் பொருட்கள் தயாரித்தல்:

அந்த தயாரிப்பையடுத்து பல வருடங்களுக்குப் பிறகு, மினிவிஸ் குழு கட்டுமானப் பொருட்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டில், பல நாடுகளில் ஒன்பது ஸ்டோர்களை உருவாக்க நைக் நிறுவனம் நியமித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மினிவிஸ் குழு நிராகரிக்கப்பட்ட நைக் காலணி, ஆடைகள் மற்றும் மதர்போர்டுகள் மற்றும் உறைகள் போன்ற மின்-கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தியதாக ஹுவாங் கூறியுள்ளார்.

அந்த வகையில், மினிவிஸ் நிறுவனம் அண்மையில், தைவானில் உள்ள ஒரு மாலுக்கு ஃபேஷன் கழிவுகளிலிருந்து ஒரு சிறப்புப் பொருளை உருவாக்க நியமிக்கப்பட்டதாகவும், அவ்வாறு உருவாக்கிய ஃபேப்ரிக் தயாரிப்பினை மாலின் உட்புறம் முழுவதும் இன்சுலேஷன் மெட்டீரியல் ஆகப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இத்தகைய சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனம் வெகு விரைவில் அமீரகத்தில் ஆலையை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment