முட்டை விலை 1 dozen ரூ.400… வெங்காயம் ரூ.250… திணறும் மக்கள்!

முட்டை விலை 1 dozen ரூ.400… வெங்காயம் ரூ.250… திணறும் மக்கள்!

Last Updated on: 19th January 2024, 09:45 pm

பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்துக்குத் தேவையான வகையில் மேற்கொள்ளப்பட்ட நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியதில் இருந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தனது வரலாற்றில், இது வரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) உட்பட பல இடங்களிலிருந்து உதவியைப் பெற்றுள்ளது, ஆனால் கடன் உதவி கிடைத்த போதிலும்,, நாட்டின் நிலைமையில் மாற்றம் ஏதும் இல்லை. சிக்கன் விலை விண்னை தொட்டுள்ள நிலையில், அதனை வாங்கமுடியாமல் தவிர்த்து வரும் மக்கள், முட்டை கூட வாங்க முடியாத அளவுக்கு பணவீக்க நிலை உள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் 12 முட்டைகளின் விலை ரூ.400-ஐ எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் செய்தி நிறுவனமான ARY வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் வரும் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது, ஆனால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதித்துள்ளது மட்டுமின்றி இங்குள்ள மக்களின் நிலையும் பரிதாபமாகி வருகிறது. ஜனவரி 15 அன்று, லாகூரில் ஒரு டஜன் முட்டையின் விலை 400 பாகிஸ்தான் ரூபாயை எட்டியது. முட்டை மட்டுமல்ல வெங்காயம் கூட பாகிஸ்தானியர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. பாகிஸ்தானில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.230 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அரசாங்கம் அதன் விலையை கிலோவுக்கு ரூ.175 என நிர்ணயித்துள்ளது.

முட்டை, வெங்காயம் மட்டுமின்றி, பாகிஸ்தானில்  சிக்கன் கறியின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அறிக்கையின்படி, லாகூரில் ஒரு கிலோ  சிக்கன் கறி ரூ.615க்கு கிடைக்கிறது. இது தவிர, நாட்டு மக்கள் அன்றாடப் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பணவீக்கத்தின் பாதிப்பை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இங்கு பால் லிட்டர் ரூ.213க்கும், அரிசி கிலோ ரூ.328க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பழங்களைப் பற்றி பேசுகையில், ஒரு கிலோ ஆப்பிள் விலை 273 ரூபாயை எட்டியுள்ளது, அதே நேரத்தில் தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Comment