Last Updated on: 20th March 2024, 11:45 pm
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம்2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நார்டிக் தேசங்கள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன.
டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள், கிரீன்லாந்து ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பகுதி நார்டிக் பிராந்தியமாக அறியப்படுகிறது. இந்த நார்டிக் பிராந்திய நாடுகள் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்தியா கடந்த ஆண்டைப் போலவே 126-வது இடத்தில் உள்ளது.