வேகமாக வறண்டு வரும் அமேசான் நதி!

வேகமாக வறண்டு வரும் அமேசான் நதி!

Last Updated on: 3rd January 2024, 10:34 pm

அமேசான் காடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெப்பமடைந்து வருவதாகவும் இதனால் நதிகளின் நீர்மட்டம் குறைந்து, வறண்டு வருவதாகவும் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.பூமியின் மிகப்பெரிய பாதுகாப்பு அங்கமாக திகழ்வது அமேசான் காடு. அமேசான் காடு பூமியில் உள்ள 150 முதல் 200 பில்லியன் மெட்ரிக் டன் கார்பன் வாயுக்களை உள்வாங்கிக் கொண்டு பூமி வெப்பமடையாமல் பாதுகாக்கிறது. இவ்வாறு கரியமில வாயுவால் பூமி வெப்பமயமடையாமல் பாதுகாப்பதில் அமேசான் காடு முக்கிய பங்காற்றுகிறது. மேலும் பல்வேறு வகையான அபூர்வ உயிரினங்கள் வாழும் பகுதியாகவும் அமேசான் காடு உள்ளது.

இப்படி பல்வேறு வகைகளில் பூமியை பாதுகாத்து வரும் அமேசான் காடு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமாக வெப்பமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அமேசான் காட்டு பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் குறைய தொடங்கி இருப்பதாகவும், மேலும் அமேசான் காட்டில் அமைந்துள்ள நதி வறண்டு வருவதாகவும் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.2023 ஆம் ஆண்டு உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அமேசான் காட்டில் உள்ள நதிகள் வறண்டு இருக்கின்றன. இதன் காரணமாக எண்ணற்ற நீர் வாழ் உயிரினங்கள், நில வாழ் உயிரினங்கள், பூச்சிகள் அழிந்திருக்கின்றன. இது மிக மோசமான சூழல்.

அமேசான் காட்டின் வெப்பம் அதிகரித்து வருவதும், நதியின் நீர்மட்டம் குறைந்து வருவதும் பூமியின் பாதுகாப்பிற்கு ஏற்ற சூழலாக இருக்க முடியாது. இன்னும் சில வாரங்களில் அமேசான் பகுதியில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. ஆனாலும் அந்தக் காலங்களில் பெய்யும் மழை அமேசானுக்கு காட்டிகளுக்கு போதுமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment