ஏர் கனடா நிறுவனத்தில் போயிங் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின இளம்பெண்..!

ஏர் கனடா நிறுவனத்தில் போயிங் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின இளம்பெண்..!

Last Updated on: 23rd February 2024, 10:53 pm

கனடாவின் ஏர் கனடா நிறுவனத்தில், போயிங் 777 விமானத்தை இயக்கும் முதல் கருப்பினப்பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் Zoey Williams (27) என்னும் இளம்பெண்.27 வயதிலேயே…அதுவும், வெறும் 27 வயதிலேயே Zoeyக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. ஒன்ராறியோவில் வாழும் Zoeyக்கு கிடைத்துள்ள கௌரவத்தில் அவரது தந்தையான Captain Orrett Williamsக்கும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது.

முதன்முறை தன் தந்தை தன்னை ஒரு சிறிய விமானத்தை இயக்கச் சொன்னபோது, அதை இயக்கியபின் நடுநடுங்கிப்போய், இனி நான் விமானத்தை இயக்கவேமாட்டேன் என்று கூறியதை நினைவுகூர்கிறார் Zoey.பின்னர், எப்படியும் இந்த பயத்தை மேற்கொள்ளவேண்டுமென முயற்சி செய்து, இன்று ஏர் கனடா நிறுவனத்தில், போயிங் 777 விமானத்தை இயக்கும் முதல் கருப்பினப்பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் Zoey.

பன்முகத்தன்மைZoey, விமானத்துறையில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளார். இசை மீது ஆர்வம் கொண்ட Zoey ஒரு பாடகியும்கூட.அத்துடன், தங்கள் கனவுகளை பின்தொடரும்படி சிறுபிள்ளைகளுக்கு உத்வேகமளிக்கும் Go Where You Belong என்னும் புத்தகத்தையும் எழுதிவருகிறார் அவர்.

மேலும் Wings Magazine என்னும் ஊடகத்தின் Top 20 Under 40 என்னும் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார் Zoey.

Leave a Comment