Last Updated on: 2nd November 2023, 08:28 pm
உலர் பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ட்ரை ஃப்ரூட்ஸ் மில்க்ஷேக் என்பது பால் மற்றும் உலர்ந்த பழங்கள், உலர்ந்த பருப்புகள் மற்றும் நறுமணத்துக்கு ஏலக்காய் என சேர்த்து தயாரிக்கப்படும் ஆரோக்கிய சுவைமிக்க பானம். காலை நேர உணவை தவிர்க்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேண்டிய ஊட்டச்சத்தை அளிக்கும் சூப்பர் பானம் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்
ஒரு டம்ளர் ட்ரை ஃப்ரூட் மில்க்ஷேக் செய்ய தேவையான பொருள்கள்
பாதாம் – 5
முந்திரிப்பருப்பு – 4
பிஸ்தா பருப்பு – 2
வால்நட் -2
உலர் திராட்சை – 8
பேரீச்சம்பழம் – 1
உலர்ந்த அத்திப்பழம் – 1
குங்குமப்பூ – 2
இழைகள்காய்ச்சிய பால் – ஒன்றரை டம்ளர்
ஏலக்காய் – வாசனைக்கு
செய்முறை
பாதாமை குறைந்தது 5 மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து எடுத்துகொள்ளவும்.மில்க்ஷேக் தயாரிப்பதற்கு இரவு முழுவதும் இந்த கொட்டைகளை ஊறவைக்க வேண்டும். குறைந்தது 3 மணி நேரங்கள் முன்பு காய்ச்சிய பால் கால் கப் எடுத்து அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை, குங்குமப்பூ இழைகள் அனைத்தையும் ஊறவிடவும்.அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.மீதியிருக்கும் பாலை சேர்த்து, ஏலத்தூள் கலந்து கலக்கி பரிமாறவும்.
ட்ரைஃப்ரூட் மில்க் ஷேக் பலரும் உணவுக்கு பிறகு எடுத்துகொள்கிறார்கள். ஆனால் இதை அப்போது குடிக்க கூடாது. ஏனெனில் இதில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் மற்ற சிற்றுண்டிகளை விட சுமார் 3 முதல் 5 மடங்கு அதிக கலோரிகள் உள்ளன. அதனால் இலேசான உணவுக்கு பிறகு எடுப்பது நல்லது.ட்ரைஃப்ரூட் மில்க்ஷேக் சாப்பிட சிறந்த நேரம் காலை வேளை தான். காலையில் உங்களுக்கு அதிக ஆற்றல் இருக்கும். மேலும் மில்க் ஷேக் சாப்பிட்ட பிறகு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். காலையில் உட்கொள்வது போதுமான ஆற்றலை அளிக்கும். அதனால் உங்கள் உணவில் இதை சேர்க்க விரும்பினால் காலை நேரத்தை தேர்வு செய்யுங்கள்.
உண்மையில் உலர் பழ பானமானது பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வரிசையை கொண்டுள்ளது. இது உடனடியாக உடலுக்கு ஆற்றலை அளிக்கின்றன. இது நாள் முழுவதும் உற்சாகம் அளிக்கின்றன.இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் ஏற்றப்படுகின்றன என்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படலாம்.
குறிப்பு:வளரும் குழந்தைகள், டீனேஜ் பருவத்தினர் முதல் வயதானவர்கள் அனைவருக்கும் ஏற்றது ட்ரைஃப்ரூட் மில்க்ஷேக். அதே நேரம் நீரிழிவு கட்டுக்குள் வைக்காதவர்கள், நட்டு ஒவ்வாமை உள்ளவர்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இதை உணவுதிட்டத்தில் சேர்ப்பதாக இருந்தால் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை அவசியம்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.