பாராலிம்பிக் போட்டி: மீண்டும் தங்கம் வென்றார் மாரியப்பன்..!

ஜப்பானில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன், உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.ஏற்கனவே மாரியப்பன் 2016ம் ஆண்டு ரியோ போட்டியில் தங்கம், 2020 டோக்கியோ போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RCB ரசிகர்களின் கனவு நனவானது!

2024 மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் | தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாட்டின் 2ஆவது உயரிய விருது: குடியரசுத் தலைவர் கையால் அர்ஜூனா விருது பெற்ற முகமது ஷமி!

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது. … Read more

சிகிச்சையால் பெண்ணாக மாறியவருக்கு விளையாட அனுமதியில்லை/ஐசிசி அறிவித்த புதிய விதிமுறை…!

ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால், அவர்கள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஐசிசி அறிவிப்பு!இந்த விதி, சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், உள்ளூர் போட்டிகளுக்கு அந்நாடுகளின் பாலின வரையறை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு என ஐசிசி விளக்கம் ஐசிசியின் இந்த விதியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் … Read more

கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

நடந்து முடிந்த 13வது ODI உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி 137 ரன்கள் குவித்த ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வு

இந்தியா 241 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக வைத்துள்ளது. வெற்றி பெறுமா இந்தியா?

இன்று ஐசிசி உலக கோப்பை அகமதாபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரை இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடி வெற்றி பெற்றது.அதேபோல ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடி அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. இன்று இரு அணியினருக்கும் இறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த அரை இறுதிப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் இன்று இறுதிப் போட்டியில் அவர் அரை சதத்துடன் வெளியேறினார். கடந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா … Read more

பன்மடங்கு உயர்ந்த விடுதி வாடகை கட்டணம்!

குஜராத்: அகமதாபாத்தில் நடைபெறவுள்ளஉலக கோப்பை இறுதி போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தின் அருகில் உள்ளதங்கும் விடுதிகள் மற்றும் அறைகளின் வாடகைகிடுகிடு உயர்வு. மேலும் விமான டிக்கெட்டுகளின்விலையும் உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி!வழக்கமாக 10,000 – 15,000 வாடகையுள்ள விடுதி அறைகள் 45,000- 50,000க்கும், 735,000 – 750,000 வாடகையுள்ள அறைகள் F1 லட்சம் வரை விற்பனையாகி உள்ளன. அதிகபட்சமாக டெல்லி – அகமதாபாத் மார்க்கத்தில்வரும் விமானங்களின் கட்டணம் 400% அதிகரித்துள்ளது

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா..!

50 ஓவர் உலககோப்பை அரையிறுதிப் போட்டி: தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா! *நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியாவிற்கு இறுதிப்போட்டி நடக்க உள்ளது.

போட்டியின்போது மழை தொடர்ந்தால் என்ன நடக்கும்?

கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையேயான WC அரையிறுதிப் போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இன்றும், நாளையும் தொடர்ந்து மழை பெய்து ஆட்டம் ரத்து |செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்!

விராட் கோலியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின் மற்றும் சச்சின் டெண்டுல்கர்!

கிரிக்கெட் அதிசயம்!“நம்ப முடியாத சாதனை. 50 ஒருநாள் சதங்கள். நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலககோப்பை அரையிறுதியில் உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்”-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் “டிரெஸ்ஸிங் ரூமில் உங்களை முதன்முதலில் நான் சந்தித்தபோது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.ஒரு இந்தியர் எனது … Read more