Last Updated on: 2nd May 2023, 09:33 am
சவுதி அரேபியா: தைஃப்-அல் அபா சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கர விபத்தில் சவுதி அரேபிய சகோதரர்கள் 6 பேர் உயிரிழந்தனர், அவர்களின் தந்தை, தாய் மற்றும் மூன்று உடன்பிறப்புகள் பலத்த காயமடைந்தனர்.
குடும்பத்துடன் மதீனாவிலிருந்து அல் பஹா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அல் பஹாவிலிருந்து தைஃப்பை இணைக்கும் நெடுஞ்சாலையில் அவர்களது வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதியது. மற்றைய வாகனத்தின் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பையன்கள் மற்றும் ஒரு பெண் உட்பட தந்தை, தாய் மற்றும் மற்ற மூன்று உடன்பிறப்புகள் தைஃபில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு வயது சிறுமி மட்டும் காயமின்றி உயிர் பிழைத்தார்.
உயிரிழந்தவர்களில் ஐந்து சகோதரர்கள் மற்றும் அவர்களது 17 வயது சகோதரி மற்றும் மற்றைய வாகனத்தின் ஓட்டுனர் ஆகியோர் அடங்குவர்.