Last Updated on: 23rd September 2023, 10:11 am
ஜித்தாவில் புதியதாக கட்டப்பட்ட Red Sea சர்வதேச விமான நிலையம் நேற்று முதல் செயல்படத் துவங்கியது. நேற்று முதலாவதாக ரியாத்திலிருந்து வந்த சவுதியா விமானம் தரையிறங்கியதன் மூலம் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் சவுதியின் கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் இயற்கை சார்ந்த விசயங்களை அறிந்து கொள்ளும் முக்கிய மையப்புள்ளியாக இருக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.