இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால்களுக்கு தடை விதித்துள்ள சவூதி அரேபியா!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால்களுக்கு சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (Saudi Food and Drug Authority – SFDA) தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறால்களில் (frozen shrimps) வெண்புள்ளி சிண்ட்ரோம் வைரஸ் (white spot syndrome virus WSSV) இருப்பதைக் கண்டறிந்த ஆணையம், உடனடியாக தடையை அறிவித்துள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் இறால் உள்ளிட்ட கடல் பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றை சோதனை செய்த போது, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறால்களில் WSSV இருப்பது கண்டறியப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவற்றிற்கு தற்காலிகமாக தடை விதிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

வெண்புள்ளி சிண்ட்ரோம் என்பது பெனாயிட் இறாலின் வைரஸ் தொற்று ஆகும். இந்த நோய் மிகவும் ஆபத்தானது மற்றும் பரவக்கூடியது, இவை இறால்களை விரைவில் கொல்லும் அளவிற்கு வீரியம் மிக்கவை. இருப்பினும், இது மனித ஆரோக்கியத்திற்கு அல்லது உணவுப் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்காது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள மீன்வளத்திற்கு WSSV பரவாமல் இருக்க, இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்திய தரப்பு போதுமான உத்தரவாதங்களை வழங்கும் வரை தடை தொடரும் என்று SFDA தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times