Last Updated on: 11th January 2024, 08:33 pm
சவுதிஅரேபியாவில் தம்மாம் பகுதியில் வீட்டு டிரைவர்களாக பணியாற்றி வந்த இரண்டு தமிழர்கள், அறையில் குளிருக்காக நெருப்பு பற்ற வைத்ததில் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். புகைக்காக நெருப்பு பற்ற வைத்து உறங்கிய போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
கள்ளக்குறிச்சியைச் சார்ந்த முஸ்தஃபா முஹம்மதலி மற்றும் வாளமங்களத்தைச் சார்ந்த தாஜ் முஹம்மது மீரான் மைதீன் ஆகியோரும் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களது உடல் தம்மாமில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.