உலக அளவில் முன்னிலை: வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் சவுதி அரேபியா

ரியாத்: உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலரிடம் உள்ளது. பெரும்பாலும் அதிக சம்பளம் வழங்கும் நாடுகளுக்கு செல்லவே போட்டி அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் என்று ஆசைப்பட்டு தவறான ஏஜென்சிகள் மூலம் பலர் வெளிநாடு சென்று ஏமாந்துவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா வெளிநாடுகளிலிருந்து வரும் பணியாளர்களுக்கு அதிக சம்பளம் தருவது இசிஏ மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சவுதி அரேபியாவில் நடுத்தர அளவில் மேலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 83,763 பவுண்டுகள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ.88.64 லட்சம் ஆகும். உலகிலேயே இப்பணிக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இதுவாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரி சம்பளம் மூன்று சதவீதம் குறைந்திருந்தாலும் உலகளவில் இதுவே அதிகபட்சம்.

அதேசமயம், மிகுந்த செலவினங்கள் நிறைந்த நகரமாக பிரிட்டன் உள்ளது. குறிப்பாக, பிரிட்டனுக்கும், ஜப்பானுக்கும் இடையே வெளிநாட்டினருக்கான ஊதிய இடைவெளி அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் சராசரி பேக்கேஜ்-சம்பளம், வரி மற்றும் தங்குமிடம், சர்வதேச பள்ளிப்படிப்பு மற்றும் பயன்பாடுகள் போன்ற சலுகைகள் உட்பட 4,46,608 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.62 கோடி) மட்டுமே வழங்கப்படுகிறது. என்றாலும் இதில் சம்பளம் என்பது மொத்தத்தில் 18 சதவீதம் மட்டுமே.

தரவுகளின் அடிப்படையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் ஹாங்காங் மூன்று இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும், சிங்கப்பூர் 16-வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஜப்பான், இந்தியா, சீனா ஆகியவை உலகளாவிய தரவரிசையில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளன.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times