இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்.. உலக அளவில் முடங்கிய X தளம் – என்ன ஆச்சு? தவிக்கும் யூசர்ஸ்!

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்.. உலக அளவில் முடங்கிய X தளம் – என்ன ஆச்சு? தவிக்கும் யூசர்ஸ்!

Last Updated on: 21st December 2023, 07:33 pm

X தளத்தை பொறுத்தவரை அவ்வப்போது சில அப்டேட் காரணமாக சில பிரச்சனைகளை எழுதுவது வழக்கம் தான். ஆனால் இந்த முறை X தளம் முழுமையாகதடைபட்டுள்ளது . அதிலும் குறிப்பிட்டாக உலக அளவில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். வழக்கமான அளவை விட அதிக இடங்களில் X தளம் முடங்கியுள்ளது. 

இன்று வியாழக்கிழமை காலை சுமார் 10.30 மணிக்கு மேல் ட்விட்டர் செயலிழந்தது என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனை உலகளாவியது மற்றும் இந்திய பயனர்களுக்கு மட்டும் அல்ல இது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்வீட்களின் தெரிவுநிலையை மட்டுமே இந்தச் சிக்கல் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. ஏனென்றால், சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில், #TwitterDown என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. எனவே, பயனர்கள் ட்வீட்களை உருவாக்கலாம் மற்றும் இடுகையிடலாம் ஆனால் அந்த ட்வீட்கள் தற்போது யாருக்கும் தெரிவதில்லை என்பது தான் உண்மை.

Leave a Comment