16.9 C
Munich
Tuesday, September 10, 2024

வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ ஃபாலோ செய்யும் நாடுகள்…

Must read

Last Updated on: 20th February 2024, 08:18 pm

உலகில் உள்ள பல நாடுகளில் பல்வேறு விதமான வேலை கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்றன.சமீபத்தில் ஜெர்மனி வாரத்தில் 4 வேலை நாட்கள் என அறிவித்தது.அதற்கு முன்னதாக ஜப்பான்-உம் கொரோனா காலத்தில் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது.இந்த வரிசையில் விரைவில் ஆஸ்திரேலியாவும் இதே போன்றதொரு சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.இந்த நிலையில், உலகில் வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ பின்பற்றி வரும் சில நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.டென்மார்க்: டென்மார்க்கில் வாரத்திற்கு, 37 மணிநேரம் தான் வேலை.

குடும்ப பராமரிப்பிற்காக பலரும் ஸ்ட்ரிக்டாக 4 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை. குறிப்பிடப்பட்ட வேலை நேரம் தவிர, ஒரு நிமிடம் கூட எக்ஸ்ட்ரா உழைப்பது அங்கே ஊக்கப்படுத்துவதில்லை.

வித்தியாசமான ஒர்க்-கல்ச்சர் பின்பற்றும் நாடுகள் 

சீனா: சிறந்த உழைப்பாளிகள் கொண்ட நாடான சீனா, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை என்ற கொள்கையை கடைபிடிக்கிறது. அதோடு வாரத்தில் 6 நாளும் வேலை. இதுதான் சீனாவின் தாரக மந்திரம்.

பிரான்ஸ்: வேலை நேரம் தாண்டி, அலுவல் சார்ந்த ஈமெயில், தொலைபேசி அழைப்பு என எதுவும் அனுமதிக்கப்படாது என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சுவீடன்: இங்கே, ஃபிகா எனப்படும் காபி இடைவேளையை தீவிரமாக கடைபிடிக்கின்றனர்.

ஜப்பான்: அலுவலக பணியின் போது குட்டி தூக்கத்தை ஊக்கப்படுத்துகிறார்கள்

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article