நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி சகவீரர் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். அவர்கள் சென்ற விண் கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 2 பேரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
அவர்களை அழைத்து வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளது.
இந்த விண்கலம் மூலம் வருகிற பிப்ரவரி மாதம் அவர்கள் பூமிக்கு திரும்ப இருக்கின்றனர். அதுவரை சுனிதா வில்லியமஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார். இதனால் அவரால் அடுத்த மாதம் ( நவம்பர் ) 5ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நேரில் வாக்களிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் அவர் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கொண்டு அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்கும் முறை 1997-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதனால் சுனிதா வில்லியம்சும் இந்த நடைமுறையை பின்பற்றி வாக்களிக்க உள்ளார். முதலில் அவர் பெடரல் போஸ்ட் கார்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுப்பார். அதன் பிறகு விண்வெளி கணிணிமூலம் மின்னணு வாக்களிக்க உள்ளார்.
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...