Last Updated on: 13th December 2023, 08:38 pm
பிரித்தானியாவில், வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கு அவருக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்
சுமார் 10 நாட்களாக வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த 37 வயது பெண். சரி என்னதான் பிரச்சினை என்று பார்த்துவிடுவோம் என அவர் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், பரிசோதனைகள் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.ஆனால், அது சாதாரண கர்ப்பம் அல்ல!
அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம்
இந்த பிரித்தானிய பெண்ணுக்கோ, கருமுட்டைக்குழாயில் கூட குழந்தை வளரவில்லை, அது அவரது வயிற்றுக்குள் வளர்ந்திருந்தது. அதாவது, உணவுக்குழாயின் ஒரு பகுதியான வயிற்றுக்குள் அந்த குழந்தை வளர்ந்திருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.அதுவும், அவர்கள் அந்த பெண்ணை பரிசோதனை செய்யும்போது, அது ஆறுமாதக் குழந்தையாக வளர்ந்துவிட்டிருந்தது.இப்படி கர்ப்பப்பைக்கு வெளியே வளரும் குழந்தையால், தாயின் உயிருக்கு ஆபத்து என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்துவிட்டார்கள்.
ஆச்சரியம்
இப்படி கர்ப்பப்பைக்கு வெளியே ஒரு குழந்தை வளர்வதே ஆச்சரியம் என்றால், இந்த குழந்தை பிழைத்துக்கொண்டது என்பது அதைவிட பெரிய ஆச்சரியம்.ஆம், அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அந்த குழந்தை, கைக்குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப்பிரிவில் அனுமதிக்கப்பட்டது.25 நாட்களில் அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட, இரண்டு மாதங்களுக்குப் பின் அவரது குழந்தையும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டது.ஆம், பிரித்தானிய தீவு ஒன்றில் வாழும் அந்த தாயும், சேயும் நலம்!