Last Updated on: 22nd August 2024, 09:32 pm
கொழும்பு: விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வர 35 நாடுகளுக்கு இன்று அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது .
இலங்கையை பொறுத்தவரை பழம்பெரும் கோயில்கள், மக்களை கவரும் விதமான கடற்ரை போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விஷயமாக உள்ளது.சமீபத்திய ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அதிகம் பேர் 2,46,922 பேர் வந்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பிரிட்டனில் இருந்து 1,23,992 பேர் இலங்கை வந்துள்ளனர்.
இந்த நாட்டின் பொருளாதாரம் கோவிட்டிற்கு பின்னர் பெரும் சரிவை சந்தித்தது. வரும் காலங்களில் இலங்கை பொருளாதாரம் மேம்படும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கை விசா இல்லாமல் இலங்கை வர அனுமதி அளிக்கப்பட்டுள்ள முக்கிய நாடுகள் விவரம் வருமாறு;
இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, தாய்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், கசகஸ்தான், சவுதிஅரேபியா, யு.ஏ.இ., நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அடங்கும்.
இலங்கை சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் பொருளாதாரத்தை சீர்தூக்கி நிறுத்த முடியும் என போக்குவரத்து துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தனா கூறியுள்ளார்.