ரஷ்யாவை புரட்டிபோடும் பனிப்புயல்: தடைப்பட்ட ஹீட்டர் சேவை: மக்கள் அவதி

ரஷ்யாவை புரட்டிபோடும் பனிப்புயல்: தடைப்பட்ட ஹீட்டர் சேவை: மக்கள் அவதி

Last Updated on: 12th January 2024, 06:14 pm

ரஷ்யாவை கடுமையான பனிப்புயல் தாக்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

ரஷ்யாவை வாட்டும் பனிப்புயல்

ரஷ்யாவை கடுமையான பனிப்புயல் தாக்கி வரும் நிலையில் தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை உறை நிலைக்கு கீழே சென்றுள்ளது.இதனால் ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் தாக்கி வருவதோடு பல பகுதிகள் பனியால் மூடி காணப்படுகிறது.

தீவிரமான பனிப்புயல் வீசும் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்

ஹீட்டர் சேவையில் குளறுபடிஇந்த கடும் குளிருக்கு மத்தியில் அதை மக்கள் சமாளிக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த ஹீட்டர் சேவைகள் கடந்த சில நாட்களாக செயல்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மின் கம்பிகளில் அதிகப்படியான பனி மூடியிருப்பதால் பொதுமக்கள் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Comment