15.6 C
Munich
Sunday, October 27, 2024

ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது: 70 பேர் காயம்!

ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது: 70 பேர் காயம்!

Last Updated on: 29th June 2024, 11:54 am

மாஸ்கோ: ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்ததில் 70 பேர் காயமுற்றனர். உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மீட்பு பணிகள் தீவிரம்

இது குறித்து இம்மாகாண கவர்னர் விளாடிமிர் உய்பா கூறுகையில்; ரஷ்யாவின் வடமேற்கு ஹோமி குடியரசு பகுதியில் சென்ற ரயில் வளைவுபகுதியில் திரும்பிய போது தடம் புரண்டு கவிழ்ந்தது. மொத்தம் இந்த ரயிலில் 215 பேர் பயணித்துள்ளனர். 9 பெட்டிகள் கவிழ்ந்ததில் 70 பேர் காயமுற்றனர். 20 பேர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here