Last Updated on: 17th May 2024, 07:48 pm
ரீடர்ஸ் டைஜெஸ்ட் – பிரிட்டிஷ் பதிப்பு, நிதிநெருக்கடி ஆனதையடுத்து, தன் பதிப்பினை முடித்துக் கொள்வதாக, அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் தெரிவித்துள்ளார்.ரீடர்ஸ் டைஜஸ்டின் பிரிட்டிஷ் பதிப்பினைத் தொடங்கிய 86 ஆண்டுகளுக்குப் பிறகு, ரீடர்ஸ் டைஜஸ்ட்பிரிட்டிஷ் பதிப்பு, முடிவுக்கு வந்துவிட்டதாக, அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக, நிதிசார்ந்த பிரச்னைகளை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்பதால் பதிப்பினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது” என்றும், தனது சக ஊழியர்களுக்கும், பத்திரிகையின் எழுத்தாளர்களுக்கும் பல ஆண்டுகளாக ஒத்துழைத்த பிரதிநிதிகளுக்கும் மற்றும் நட்பு நிறுவனங்களுக்கும் நன்றியினையும் வருத்தத்தினையும் தெரிவித்துள்ளார்.
ரீடர்ஸ் டைஜஸ்ட் 1922-ஆம் ஆண்டில அமெரிக்காவில் டெவிட் வாலஸ் மற்றும் அவரது மனைவி லிலா பெல் வாலஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் புகழ் பெற்றது. 1929-ஆம் ஆண்டுகளில், இது கணிசமான வாசகர்களையும் கணிசமான வருவாயையும் பெற்றிருந்தது.
1929-இல் 2,90,000 சந்தாதாரர்களையும் மற்றும் ஆண்டுக்கு 9,00,000 அமெரிக்க டாலர் வருமானத்தையும் கொண்டிருந்தது.அதில் சுகாதார ஆலோசனைகள், நிதி ஆலோசனைகள் மற்றும் சமையல் குறிப்புகள் போன்ற இடம்பெற்று இருந்தன.ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் உலகளாவிய பதிப்புகள் 70-க்கும் அதிகமான நாடுகளில் 21 மொழிகளில் 49 பதிப்புகளோடு, கூடுதலாக 40
மில்லியன் மக்களைச் சென்றடைந்தது.ஒரு காலகட்டத்தில் இவ்விதழ் உலகின் 10.5 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையைக் கொண்டிருந்தது, இது உலகின் மிகப்பெரிய அளவிலான விற்பனையாகும் இதழாக இருந்தது. ஒருகட்டத்தில், இது சீனா, மெக்ஸிகோ, ஸ்பெயின், ஸ்வீடன், பெரு போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி கொண்டிருந்த இதழாக இருந்தது.
மொத்தம் 23 மில்லியன் பதிப்புகளுடன் சர்வதேச அளவிலான விற்பனையை கொண்டிருந்தது.பிரிட்டிஷில் முதல் வெளியீட்டை 1938- இல் தொடங்கியது.2000-ஆம் ஆண்டில் மாதத்திற்கு சுமா ஒரு மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டதென்றும், பின்வந்த ஆண்டுகளில், கடுமையாக வீழ்ச்சியடைந்தது என்று கூறப்படுகிறது. தற்போது, கடும் நிதிநெருக்கடி காரணமாக, தன் பிரிட்டிஷ் பதிப்புகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
I like this site very much, Its a rattling nice spot to read and receive
info.Raise range